பஞ்சதந்திரம்
ஸ்ரீராஜலெட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் பஞ்ச தந்திரம், தேனப்பன், முன்னணி நடிகர் கமலஹாசன், முன்னணி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் படம் இது. அவ்வை சண்முகி, தெனாலி ஆகிய வெள்ளிவிழா படங்களுக்கு பிறகு ரவிக்குமார், கமலஹாசன் இணையும் படம். காதலா காதலா, பம்மம் கே சம்பந்தத்திற்கு பிறகு தேனப்பனுடன் கமல் இணைந்து பணியாற்றும் படம் இது.

பஞ்ச தந்திரம் பெயரை போலவே கமலுடன் 4 பேர் இணைந்து 5 பேராக படம் முழுவதும் வலம் வருகின்றனர். ஜெயராம், யூகி சேது, ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமனுடன் கமலும் இணைந்து கலகலப்போகிறார். இந்த 5 பேரும் இணைந்து தந்திரங்கள் செய்வதே பஞ்சதந்திரத்தின் கதை. முதல் தந்திரத்தை செய்பவர் கமல்.

ஸ்ரீராஜலெட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் பஞ்ச தந்திரம், தேனப்பன், முன்னணி நடிகர் கமலஹாசன், முன்னணி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் படம் இது. அவ்வை சண்முகி, தெனாலி ஆகிய வெள்ளிவிழா படங்களுக்கு பிறகு ரவிக்குமார், கமலஹாசன் இணையும் படம். காதலா காதலா, பம்மம் கே சம்பந்தத்திற்கு பிறகு தேனப்பனுடன் கமல் இணைந்து பணியாற்றும் படம் இது.

தயாரிப்பாளர்களின் டைரக்டர் எனப் புகழப் படும் கே.எஸ். ரவிக்குமார் சக்கரம் போல் சுழன்று இப்படத்திற்கான வேலைகளை மேற் பார்வையிட்டு வருகிறார். படத்தில் இன்னமும் ஒரு கதாநாயகி நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. யார் அந்த நாயகி? விரைவில் இந்த சஸ்பென்ஸ் முடிவுறும்.

கதையம்சம், நடிப்பு ஆகியவற்றில் மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் புதுமையுடன் தயாரா கிறது பஞ்சதந்திரம். இந்த படத்க்கான ஸ்டில்கள் லண்டனில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட லென்சுகள் மூலம் எம் 'டிவி'. ஸ்டலில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக புதிய வடிவத்துடன் ஸ்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பாலிவுட்டில் கூட இத்தகைய ஸ்டில்கள் எடுக்கப்படவில்லை. முதன்முறையாக கோலிவுட்டில் இந்த புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் இரண்டு கதாநாயகிகள் தோன்றி கவர்கின்றனர். சிம்ரனுக்கு கவர்ச்சி இல்லாத, கதையுடன் ஒன்றி நடிக்கும் வித்தியாசமான கேரக்டர். படையப் பாவில் ரஜினிகாந்துக்கு நடிப்பின் மூலம் சவால் விட்டு பெரும்புகழ் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கேரக்டர்கள் பெருமளவில் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றது.

இப்படத்திலும் ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர் பரபரப்பாக இருக்கும் என்றே தெரிகிறது. தனது நடிப்பின் மூலம் கமலுக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் சவால்விடுவார என எதிர்பார்க் கலாம். படையப்பா கேரக்டரையும் தாண்டி, இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவில் தலைசிறந்த ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் இப்படத்திற்கு ஆர்ட் டைரக்ஷனை கவனிக்கிறார். குறிப்பிட்ட படங்களில் மட்டுமே வேலை செய்ய ஒத்துக்கொள்ளும் சாபு சிரில் குறுகிய கால தயாரிப்பான படத்தில் பணியாற்ற முன் வந்திருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. பஞ்ச தந்திரத்திற்கு மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பலம், ஆர்தர் ஏ. வில்சன். இவரின் உன்னதமான ஒளிப்பதிவால் படம் மிளரும்.வைரமுத்துவின் அற்புதமான பாடல் வரிகளுக்கு இசையமைத்து இருக்கிறார் தேவா. பஞ்ச தந்திரத்தின் பெயரை போலவே பாடல்கள் எண்ணிக்கையும் ஐந்து. இந்த கூட்டணியுடன், எழுத்துக்களால் ரசிகர்களின் வயிற்ற குலுங்கச் செய்யும் கிரேசி மோகனும் இடம் பெற்றுள்ளார். இவரின் மிக கலகலப்பான வசனங்கள் அனைவரையும் ஈர்க்கும்.

© TamilOnline.com