மார்ச் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நந்தலாலா மிஷன், சுனிவாலியில் உள்ள ponderosa ஆரம்பபள்ளிகூடத்தில் வைத்து படிப்புத் திறமை போட்டி ஒன்றை நடத்தியது. கணிதம், பூலோகம், உச்சரிப்பு மற்றும் எழுத்து ஆகிய துறைகளில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக பலபேர் நகரங்களிலிருந்து வந்திருந்தார்கள்.
சிறுவர்களுக்குப் படிப்பின் முக்கியத்துவத்தைப் போட்டிகளின் மூலம் வலியுறுத்தும் நோக்கத் தில் நந்தலால மிஷன் உருவானது. தென்றல் பத்திரிகை மூலமாக இந்த விசயத்தை குழந்தை கள் அறிந்து கொண்டார்கள்.
50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள். போட்டி க்கு ஏற்பாடு செய்தவர்கள் சிறுவர்களை 4-7, 7-10, 10-13, 13-16 என்று வயதுக்கேற்றவாறு நான்கு பிரிவாகப் பிரித்தார்கள். போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்கள் மிக உற்சாகமாக கேள்விகளுக்குப் பதில்களை அளித்தனர்.
இந்தப் போட்டிக்கு வந்திருந்த பெரியவர் களும் மிக உற்சாகமாக இருந்தனர். மிகக் கடினமான கேள்விகளுக்கும் சரியான விடைகள் வந்து கொண்டிருந்தன. விடைகள் தவறாக இருந்த போதிலும், சிறியவர்களின் மன துணிச்சலை கண்டு பெரியவர்கள் பெருமிதத் துடன் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு போட்டி யிலும் மூன்று சிறுவர்கள் வெற்றி கோப்பையைப் பெற்று சென்றார்கள்.
அடுத்த வருடம் நடத்தப் போகும் போட்டி பற்றி இந்த வருடமே விவாதிக்கப்பட்டது. வெற்றிகரமாக நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்த வெற்றி கலந்து கொண்ட சிறுவர் களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெரியவர் களுக்கும், அதைவிட மிக நன்றாக இதனை ஏற் பாடு செய்து நடத்திய நந்தலாலா மிஷன் குழுவினருக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
சுமதி ஆர். சினிவாசன் |