தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது!
கணினியிலும் (computer) இணையத்திலும் (internet) திறமையுடன் பணியாற்றி வரும் நம்மில் பலர், இந்த இரு துறைகளாலும் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதை நன்கு அறிவோம். தமிழிலும், தமிழ் பேசும் நல்லுல கெங்கும் அதே போன்ற வளர்ச்சி வேண்டும் என்ற நோக்கோடு உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து உத்தமம் ( உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் INFITT ) என்ற அமைப்பைச் சிங்கப்பூரில் நடந்த உலகத் தமிழ் இணைய மாநாடு - 2000-இல் உருவாக்கினர். சென்ற ஆண்டு இந்த மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. சிங்கப்பூரிலும், கோ¡லாலம்பூரிலும், அமெரிக்காவின் காம்டெக்சுக்கு (Comdex) இணையாக நடந்த கண்காட்சிகளில் பல தமிழ் மென்பொருட்களையும், கருவிக¨ளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். இந்தக் கண்காட்சி 50,000 -க்கும் மேற்பட்ட தமிழர்களால் வரவேற்கப்பட்டது.

தமிழில் கணினி மற்றும் இணையத் தொழில் நுட்பங்களை முன்னேற்றும் நோக்கோடு நடை பெறும் இந்த மாநாடு, வரும் செப்டம்பர்-அக்டோபர் இலையுதிர்காலத்தில் சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் நடைபெற உள்ளது. நீங்கள் நினைத்தால் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படைக்கலாம்; மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர்களோடு தோள் கொடுத்து உழைக்கலாம்; உங்கள் நண்பர் களிடையே இந்தச் செய்தியைப் பரப்பலாம். "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!"

தமிழ் இணையம் - 2002 மாநாடு வட அமெரிக்கத் தமிழர்கள் தம்மிடையே கணினித் தமிழையும், இணையத் தமிழையும் பரப்பவும், இணையத் தமிழில் புதிய சாதனைகள் படைக்கவும், தமிழ் மின்வணிக முயற்சிகளுக்கு அடிகோலவும் அமையும் நல்ல வாய்ப்பாக அமையும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர் களுக்கே உரித்தான சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், வட அமெரிக்கத் தமிழர்களின் திறமைகளை ஒருங்கிணைத்துத் தமிழ் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும் வரும் இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள். தகவல் தொழில் நுட்பத்துறையில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, எல்லாத் தமிழர்களை யும் ஈர்க்கும் மாநாடாக இது அமைய வேண்டும்.

வரும் தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்கவும் தொண்டு புரியவும் விழையும் வட அமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டு அமைப்பாளர் மணி மு. மணிவண்ணனை mmanivannan@earthlink.net என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகுங்கள்.

© TamilOnline.com