கடந்த மார்ச் 2-ஆம் தேதி விரிகுடா பகுதி தமிழ் மன்றத்தின் சார்பில் வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி யொன்று நடைபெற்றது. மயில்கள் தோகை விரித்து வசந்த காலத்தை வரவேற்பது போல குழந்தைகள் வரவேற்றார்கள்.
சுமார் 210 குழந்தைகள் பங்கேற்ற இந் நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்தில் துவங்கி, கர்னாடக இசை, பாரதியார் பாடல், கிராமியப் பாடலுக்கான நடனம், நாடகம் என அனைத்து துறைகளையும் வலம் வந்து, வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர் என்ற பாட்டுடன் முடி வடைந்தது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஒலி பெருக்கி அமைப்பு, குழந்தைகள் அனை வருக்கும் பரிசு கோப்பைகளை வழங்கியது. குழந்தைகளும் பெரியவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். |