ஆங்கிலப்படத்தில் நிழல்கள் ரவி!
பொதுவாக இந்தி நடிகர்கள் நடிகைகள்தான் ஹாலிவுட் படங்களில் நடிக்க தேர்வு செய்யப் படுவார்கள். ஆனால் தமிழ்பட நடிகர் ஒருவர் ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நிழல்கள் ரவி.

நிழல்கள் ரவி பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இதுவரை சுமார் 200 படங்கள் மலையாளம், தெலுங்கு உள்பட நடித்திருக்கிறார்.

'The spring ' என்ற ஆங்கில படத்தில் நடிப்பதற்கு அவர் கையெழுத்திட்டுள்ளார். இதனுடைய படப்பிடிப்பு லண்டலின் 12 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இவர் ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார்.

இப்படத் தயாரிப்பாளர்கள் படத்தில் வழக்கறிஞராக நடிப்பதற்கு இந்திய நடிகரை மின்னஞ்சல் மூலம் தேர்வு செய்ய விண்ணப்பித்திருந்தனர்.

தற்செலயாக அதை பார்த்த நிழல்கள்ரவி தன் புகைப்படத்துடன் தன்னுடைய biodataவை மின்னஞ்சல் மூலம்அனுப்பி வைத்திருந்தார். இப்போது அவர் அப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

© TamilOnline.com