dialog
சினிமா தியேட்டரில்:

"ஏன்டா மச்சி! நீ மட்டும், pizza வாங்கித் திங்கறியே. வயத்த வலிக்கப்போறதுடா"

"டேய், எனக்கு வயத்த வலிச்சதனாலதான் Pizza சாப்பிடறேன். அவன் எல்லாருக்கும் தாண்டா விக்கறான்"

"சரி, ஏதோ கடுப்புல இருக்க போலயிருக்கு. நீயே வாங்கிக்கடான் னுட்ட! ஓகே மா. எல்லாம் என் நேரம்"

*****


வானொலி நிகழ்ச்சியின் சிறுவர் நேரத்தின் போது, நிகழ்ச்சியின் உப தொகுப்பாளர்:

"தம்பீ, நீங்க இப்ப பாடின "கேரயா நீரணு" ங்கற பாட்டு ரொம்பப் பிரமாதமா இருந்திச்சி. இது 'புரந்தரதாசர் எழுதின பாட்டு தான?"

சிறுவன்: "இல்ல, எங்க டீச்சர் எழுதினது"

*****


டேய் ராம்கி, நம்ம சந்தர பாருடா. எப்பவும் 'work-out' (excercise) மயமாவே திரியாறானே. உனக்கு அதமாதிரி பழக்கமெல்லாம் கிடையாதா?

அளவோட சாப்பாடு சாப்டா, இதெல்லாம் எதுக்குடா?!

ஏதோ நல்லதுன்னு நினைச்சு, உங்கிட்ட சொல்ல வந்தேன் பாரு. என்ன அடிச்சுக்கணும்.

*****


உஷா மாமியின் வீட்டில்:

என்ன கீதா, போன சண்டே, நம்ம வனிதா வீட்டில நடந்த 'pot-luck' க்கு 20 பேர் வந்தாளாமே, எப்படியிருந்தது?

நீ வேற! 'pot' எங்க நாலு பேருக்கு மட்டும் தான். மத்தவங்களுக்கு எல்லாருக்கும்தான், "luck"

கொஞ்சம் தெளிவாச்சொல்லேன்.

சாம்பார் சாதம், உருளை கறி, கூட்டு இத்யாதிகள நாங்க பண்ணிகிட்டு போக, அவா டம்பளரும், தண்ணியும், ஸ்பூனும் கொண்டுவந்தா.

*****


லதா ஆன்டியின் வீட்டில்:

லதா, இதென்ன யானை தந்தத்தில பண்ண வேலைப்பாடு மாதிரியிருக்கே, நீ சுவத்தில மாட்டியிருக்கறது.

இல்ல!, எங்க வீட்டுக்காரருக்கு, பிராணிகளை வதம் பன்னா பிடிக்காது தெரியுமா. அது ஏதோ மாட்டுக்கொம்புல பன்னது.

அப்படியா.

*****


சுரேஷ் வீட்டில்:

ஏங்க, உங்க பிரெண்டு கமலா, 200 டாலர் கொடுத்து அவ குழந்தைக்கு ஒரு கார் சீட்டு (பேபி சீட்டு) வாங்கியிருக்காளாமே. ரொம்பதான் அலட்டிக்கறா. நம்ம குழந்தைக்கு வாங்கும்போது மட்டும், ஏங்க ரொம்ப சீப்பா வாங்கினீங்க?

அடியேய், நாம 70 ரூபாய்க்கு வாங்கின அதே பிராண்டு சீட்டைத்தான், அவ ஒரு பெரிய கடைக்கு போய் ஜாஸ்தி கொடுத்து வாங்கிருக்கா போல.

என்னங்க, எனக்கு ஒரு கிலோ சுவீட்டு சாப்பிட்டா மாதிரியிருக்குங்க. தோ, இப்ப கமலாகிட்ட அன்பா பேசிட்டுவரேன்.

(மாட்டிக்கிட்டா கமலா மாட்டிக்கிட்டா...)

*****


சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட 'அறுபடை வீடு' நாடகமொன்றின் ஒத்திகையின்போது, டைரக்டர்:

"ஆல் முருகாஸ், பிளீஸ், keep the 'வேல்' in your right hand. சரியா.

காரணம் வேறொண்ணும் இல்லயாம். நடிக்கிற 15 குழந்தைகள்ல பாதி பேரின் தாய் மொழி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி.

(அட நேஷனல் இன்டகிரேஷன்! வாழ்க சேவை!)

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com