கடி ஜோக்குகள்
என் மாமியாருக்கு என்ன இருந்தாலும் கொழுப்பு ஜாஸ்தி

ஏன் அப்படீ சொல்லரே?

பின்ன என்ன? நான் முதல் தடவையா அவங்க வீட்டுக்குப் போகும்போது, 'பே வா மகளே பேய் வா'ன்னு பாடி ஆரத்தி எடுத்தாங்களே?

*****


உன் மனைவிக்கு இனிப்பு பிடிக்காதுன்னா நல்லதுதானே?

அதுக்காக முதல் இரவுலே பாதாங்கீருக்கு பதிலா மோர்க்குழம்பை தம்பளர்லே கொண்டு வந்தா எப்படி?

*****


என் பக்கத்து வீட்டு கணவன் மனைவி எப்பவும் ஒண்ணா சிகரெட்டு குடிப்பாங்க.

அப்படீன்னா அவங்க ஒத்துமையான 'தம்' பதின்னு சொல்லுங்க...

*****


என் கணவர் எப்பவும் நான் கிழித்த கோட்டை தாண்டமாட்டார்.

அதுக்காக எதுக்கு நீ அவருடைய கோட்டைப்போய் கிழிக்கணும்?

*****


டாக்டர் என் இருதய ஆபிரேஷனுக்கு சுத்தியலை ஏன் கொண்டு வந்திருக்கீங்க...

உங்களுக்கு கல் நெஞ்சுன்னு சொன்னாங்களே...

*****


தோழி: கல்யாணம் ஆகி உன் மாமியாரை கையோட கூட்டி வெச்சுக்கிட்டயாமே? நல்ல பெண் நீ...

தோழி: அது எல்லாம் ஒண்ணுமில்லே! எங்க வீட்டுக்காரருக்கு சமைக்க தெரியாது

*****


மானேஜர்: எதுக்கு ஒரு வாரம் லீவு கேட்கறீங்க?

குமாஸ்தா: வீட்டுவேலைக்காரி ஒரு வாரம் லீவ் போடப்போறா...

ஹெர்கூலீஸ் சுந்தரம்

© TamilOnline.com