மார்ச் 2002 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக

1. கோத்திரத்தை நிலைநாட்டத் தேவை (5)
4. தம்பிக்கு முன் பிறந்த தூரத்துச் சோலை (3)
6. ஒரு மாதத்தில் மறுமணம் செய்ய வந்தாள் (3)
7. தூய தங்கத்திற்குப் பாதி சன்னிதி பொறுமா? (5)
8. பல வாரக் கதை புதிதாகத் தொடங்கும் உறவு (4)
9. மாட்டின் முக்கிய அம்சம் கூறும் மதநெறி ?(4)
12. விரல் வருட கசங்கும் இதழ், ஒரே நாளில் சுவையிழக்கும் (5)
14. சுவாரசியமான தன்னலமற்ற பேச்சு ? (3)
16. பொட்டுடனோ, வேருடனோ கொறிப்பது (3)
17. அற்பமாக வேறுவிதமாக எண்ணும் பா மாற்றம் (5)

நெடுக்காக

1. அரசு நிர்வாகம் முட்டை உட்கரு கொண்டு வாழ்த்து (3)
2. அய்யராத்து ஆசிரியர் பள்ளிக்குச் செல்லார்! (5)
3. தானே யமன் தலையிட நலந்தானா? (4)
4. நல்ல வாலோடு வெட்டு கூக்குரலிடு (3)
5. ஆஸ்திரேலிய ஏரியில் நீந்தும் மையிட்டச் சோறு ? (5)
8. முழு ஈரமாகத் தொழில் தொடங்க கப்பலா கவிழும் ?(5)
10. பாதிச் சுவரின் வெளியே சோறு என்றுமிருப்பது (5)
11. நட்பை உதறி பேச்சில் ஒட்டிக்கொண்ட சோற்றில் நட்டத்தில் கடிபடுவது (4)
13. நீர் கொஞ்சம் சிலந்தி வலையில் இருங்களேன்! (3)
15. புத்தாண்டுத் தொடக்கத்தில் வேழம் மேலே வரச் செய்வாய் (3)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:1. ஆண் வாரிசு 4. அக்கா 6. சித்தி 7. மாசறுபொன் 8.தொடர்பு 9. ஆசாரம் 12. பத்திரிகை 14. வம்பு 16. கடலை 17. துரும்பாக
நெடுக்காக:1. ஆட்சி 2.வாத்தியார் 3.சுயமாக 4.அலறு 5.காரன்னம் 8.தொப்பலாக 10.சாசுவதம் 11.பகைத்து 13.திவலை 15.புரிக

© TamilOnline.com