www.tamilvu.org
உலகிலுள்ள சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும் விழுமியங்களையும் பண்பாட்டையும் பாதுகாப்பதில் பேரார்வம் கொண்டு விளங்குகிறார்கள் என்பது தெரிந்த சேதிதான்! இத் தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு தொடர்பு கொண்டு தாய்மொழியை வளர்க்க அரும்பாடுபட்டு வருகின்றனர்.

தங்களது தாய்மொழியான தமிழ் தங்களோடு அழிந்துவிடாமல், தம்முடைய சந்ததியினர் களுக்கும் தொடர வேண்டும் என்று விரும்புகி றார்கள். அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசால், 'தமிழி ணையப் பல்கலைக் கழகம்' (www.tamilvu.org) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் இணையப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, முழு நேர இயக்குனர் பொறுப்பில் செயற்பட்டு வருகிறது.

முனைவர் மு.பொன்னவைக்கோ இந்தப் பல்கலைக் கழகத்துக்கான இயக்குனராகச் செயற்பட்டு வருகிறார். (பார்க்க; பேட்டி)

காண்போர், அறிநர், மாணவர், நூலக உறுப்பினர் என நான்கு பிரிவின் அடிப்படையில் இணையப் பல்கலைக் கழகப் பயன்பாட்டா ளர்கள் பகுக்கப்பட்டு அவர்களுக்குச் சேவை வழங்கப்படுகிறது.

காண்போர் என்னும் பிரிவின் கீழ் வருபவர்கள் இந்த இணையத் தளத்தை இலவசமாகவே பார்வையிடலாம். மாதிரிப் பக்கங்களுக்கும் இலவசமாகவே சென்று வரலாம். அறிநர் என்னும் பிரிவின் கீழ் வருபவர்கள் பாடத் திட்டங்களில் இடம்பெறும் பாடங்கள் எவற்றுக்கேனும் கட்டணம் கட்டி, அப் பாடப் பொருள் பற்றிய அறிவு பெறலாம். மாணவர் என்போர் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கும் பாடத் திட்டம் எதற்கேனும் கட்டணம் கட்டி மாணவராகச் சேரலாம். மாணவர்களுக்கு நூலகப் பகுதிக்குள் முழுமையாகச் சென்று வர கட்டணம் ஏதும் இல்லை. நூலக உறுப்பினராக விரும்புபவர் ஆண்டுக் கட்டணம் அல்லது ஆயுள் கட்டணம் செலுத்தி நூலக உறுப்பினராகலாம். நூலக உறுப்பினர் ஆன ஒருவரால் பாடப் பிரிவிற்குள் செல்ல இயலாது.

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் மாணவராக இணைந்து சான்றிதழ் பெறுபவர் களுக்கு தஞ்சைப் பல்கலைக் கழகம் சான்றிதழ் வழங்குகிறது. மாணவர்கள் வசிக்கும் இடங் களில் உள்ள தொடர்பு மையங்கள் வழியாகவும் தேர்வுகள் எழுதலாம். தேர்வு எழுதுவதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது.

சான்றிதழ் கல்வி (தொடக்க நிலை)

சான்றிதழ் கல்வி ஒரு தொடக்க நிலைக் கல்வி. இத் திட்டத்தின் கீழ் தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் தமிழ் மொழிப் பாடத் திறன்கள் அடிப்படை நிலை, இடைநிலை, மேல்நிலை என்ற மூன்று நிலைகளில் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் மழலைப் பாடல்கள், அறநெறிக் கதைகள் போன்ற வைகளும் இடம்பெறுகின்றன. பாடங்கள் அனைத்தும் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி அச்சு, ஒலி, ஒளி வடிவங்களில் மிகவும் ஆர்வமூட்டும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.

அடிப்படை நிலைப் பாடங்கள்

அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துக்கள் யாவும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எழுத்துக் களில் ஒலி, வரி வடிவங்களைப் பயின்று எழுதிப் படிக்கும் வகையில் பயிற்சிகளுடன் பாடங்கள் தரப்பட்டுள்ளன. சிறுவர்களுக்காக மழலைக் கல்வியும் அசைவுப் படக் கதைகளும் அசைவுப் படங்களுடன் மழலைப் பாட்டுகள் பலவும் கொடுக்கப்பட்டுள்ளன.

இடைநிலைப் பாடங்கள்

இடைநிலையில் பயில்வோர் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், உரையாடுதல் இலக்கணக் கூறுகள் போன்ற மொழித் திறன்களைப் பெறுகின்ற வகையில் பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மேல்நிலைப் பாடங்கள்

மேல்நிலையில் பயில்வோர்களுக்கு அறிவியல் கட்டுரை, கலந்துரையாடல், வருணனை, கவிதைகள், செய்தி வெளியிடல், சிறுகதை, இலக்கியக் கட்டுரை, நாடகம், பயணக் கட்டுரை போன்ற இலக்கிய, இலக்கண மொழித் திறன்களைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி

உயர் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு, கலை ஆகியவை பற்றிய பாடங்கள் அறிமுக நிலை முதல் ஆய்வு நிலைவரை பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகின்றன. இவை தமிழியல் பட்டயம், தமிழியல் மேற்பட்டயம், இளநிலை, முதுநிலை, தமிழியல் ஆய்வு என்ற பெயர்களில் பட்டங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டயங்களையும் பட்டங்களையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கும்.

ஆய்வுக் கல்வி

தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகிய துறைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற விரும்புவோருக்கு தேவையான பார்வை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மிகுதியான அளவில் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மின்நூலகத் தில் இடம்பெறுகின்றன. ஆய்வை வழிநடத்த தமிழகப் பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரிய வல்லுநர்கள் பலரின் உதவிக்கு வழி செய்யப்படுகிறது. ஆய்வுப் பட்டங்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கும்.

தேர்வு முறை இணையவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற இருவழிகளில் மேற்கொள்ளப் படுகிறது. இணைய வழித் தேர்வு பாட ஆசிரியர்களால் இணைய வழி நடத்தப்படும். மாணவர்கள் அவர்களுக்கு அருகில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு மையங்களில் உள்ள கணிப்பொறிகள் மூலம் தங்கள் தேர்வுகளை எழுதுவார்கள்.

நேர்முகத் தேர்வு என்பதில் இணைய வழித் தேர்வு செய்ய இயலாத, பாடப் பகுதிகளில், தொடர்பு மையங்களில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்வா ளர்களால் நடத்தப்படும்.

மிகப் பெரிய மின்நூலகம் ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நூலகத்தில் சங்கம் முதல் இன்றைய புதுக் கவிதைகள் வரை அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என்ற தலைப்பில் தமிழ் தொடர்பாக வெளியான இலக்கண மற்றும் இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் தரப்பட்டுள்ளன.

தேர்வில் கலந்து கொண்டு பட்டங்களைப் பெற விரும்புபவர்களுக்கு மிகக் குறைவான கட்டணமே விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிகமான தகவல்களைப் பெற விரும்பு பவர்கள் www.tamilvu.org என்ற இணையத் தளத்தைப் பார்வையிட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

சரவணன்

© TamilOnline.com