பயிறு அடை
தேவையான பொருட்கள்

பயறு - 3 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 2 அங்குல நீளம்
கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் அல்லது தேங்காய் தூள் - தேவையானால்
எண்ணெய் - 1/2 கிண்ணம்

செய்முறை

பயறை முதல்நாளே ஊற வைக்கவும். (முளை வந்த பயறு ஆனாலும் சிறந்தது) அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

அரிசி, பயறு இவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்வி, உப்பு, பெருங்காயம் இவற்றையும் சேர்த்து மிக்ஸி/கிரைண்டரில் ஓரளவு வழவழப்பாக அரைக்கவும். (இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கியும் போடலாம்)

தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடை தட்டவும்.

மாவு அரைத்து 2, 3 மணி நேரம் கழித்து செய்தால் மிருதுவாக இருக்கும்.

பயறுக்கு பதிலாக பயத்தம்பருப்பும் உபயோகிக்கலாம்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com