தவலை அடை
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 ஆழாக்கு
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு
கடலை பருப்பு - 1/4 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - 1 பிடி
மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவையானது
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 கரண்டி
கடுகு - 1 ஸ்பூன்

செய்முறை

அரிசி, பருப்பு வகைகள், மிளகாய் வற்றல் இவற்றை மிக்யில் மெல்லிய ரவா போல் பொடி செய்யவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பெருங்காயம் பொறித்து, 3 ஆழாக்கு தண்ணீர்விட்டு தேவையான உப்பு போடவும்.

தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள ரவாவை போட்டு கைவிடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.

சுமாராக வெந்ததும் கீழே இறக்கி வைத்து ஆற வைக்கவும்.

வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளறி வைத்த மாவை உருட்டி லேசாக தட்டி எண்ணெயில் போட்டு அதன் மேல் மேலும் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு மேலே குழிவான மூடியால் மூடவும். 5 நிமிடம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிடலாம் அல்லது தட்டில் எடுத்து வைத்து விடலாம்.

திருப்பிவிட்டால் இரண்டு பக்கமும் கரகரப்பாக இருக்கும்.

இதைபோல் மீதி உள்ள மாவையும் தட்டி எடுத்து சூட்டுடன் சாப்பிடவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com