உரைப்பு அடை
தேவையான பொருட்கள்
அரிசி (பச்சரிசி) - 1 ஆழாக்கு
தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது - 1/2 ஆழாக்கு
பச்சை மிளகாய் - 4
வற்றல் மிளகாய் - 2
இஞ்சி - 2 அங்குலத்துண்டு
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
காராமணி - 1 கரண்டி
வெண்ணெய் - தொட்டுக்கொள்ள

செய்முறை

வெல்லஅடைக்கு செய்ததை போல் மாவை தயார் செய்து கொள்ளவும். காராமணியை ஊற வைத்து வேக வைக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயத்தை பொரித்து கடுகு தாளித்து மிளகாய் வற்றல் வறுத்து, பச்சை மிளகாய், இங்சி. கருவேப்பிலை இவற்றை வதக்கி தேங்காய் தூளை போட்டு கலந்து இரண்டு (அரிசியின் தன்மைக்கேற்ப) டம்ளம் தண்ணீர்விட்டு உப்பு, வெந்த காராமணி, இவற்றை போடவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள மாவை தூவினாற் போல் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை (நிதானமாக எரியும் அடுப்பில்) கிளறி கீழே இறக்கவும். தாம்பாளத்தில் ஆற வைக்கவும்.

ஆறியம் கையால் நன்றாக பிசைந்து (தேவையானால் தண்ணீர் சேர்த்து) சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து வடைபோல் தட்டி ஓட்டை போடவும். இட்லி தட்டில் வைத்து 20 நிமிடங்கள் குக்கரில் (ஆவியில்) வேகவிடவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com