காரடையான் நோன்பு - வெல்ல அடை
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 ஆழாக்கு வெல்லம் - 1 1/4 ஆழாக்கு தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது - 1/2 ஆழாக்கு ஏலக்காய்பொடி - 2 ஸ்பூன் காராமணி - 1 கரண்டி வெண்ணை - தொட்டுக்கொள்ள
செய்முறை
காராமணியை லேசாக (வாணலியில்) சூடு செய்து 4, 5 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை துணியில் வடிகட்டி அரிசியை மிக்ஸியில் மாவாக பொடி செய்யவும். பொடி செய்த மாவை வெறும் வாணலியில் ளஞ்சிவப்பாக வறுக்கவும். காராமணியை குக்கரில் வேகவிடவும்.
வாய் அகலமான இண்டாலியம் வாணலியில் 2 டம்ளர் (அரிசியின் தன்மைக்கேற்ப) தண்ணீர் விட்டு வெல்லப் பொடியை போட்டு கொதிக்கவிடவும். (வெல்லத்தில் மணல் இருந்தால் வடிகட்டவும்)
தேங்காய்தூள், வெந்த காராமணி இவற்றை போட்டு வறுத்து வைத்துள்ள மாவை தூவினாற் போல் போட்டு கட்டிகள் தட்டாமல் கிளறவும். அடுப்பை நிதானமாக எறியவிட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கிளறி கீழே இறக்கி வைத்து அகலமான தாம்பாளத்தில் ஆற வைக்கவும்.
நன்றாக ஆறியதும் ஏலப்பொடி போட்டு கையால் நன்றாக பிசையவும்.
கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து பிசையலாம்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து இட்லி சைஸில் வடைபோல் தட்டி நடுவில் ஓட்டை போடவும்.
இட்லி தட்டில் வைத்து இட்லி வேகவிடுவதைபோல் குக்கரில் 20 நிமிடங்கள் வேகவிடவும்.
இந்திரா காசிநாதன் |