தேவையான பொருட்கள்
பிரட் - 12 துண்டுகள் எண்ணெய் - 2 டேபிள் கரண்டி ரவை - 2 டேபிள் கரண்டி இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த கலவை - 1 டேபிள் ஸ்பூன் சிகப்பு மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப தயிர் - 1/2 கிண்ணம் எனோ பழசால்ட் - 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா - 1/2 டேபிள் ஸ்பூன் கரம்மசாலா தூள் - 1/4 டேபிள் ஸ்பூன் துண்டு துண்டாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் பிரட் ஓரங்களில் உள்ள பிரவுன் பகுதிகளை எடுக்கவும்.
பிறகு கெட்டி தயிரில் பிரட்டை 10 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பிறகு அதை நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நன்றாக வதக்கி எடுக்கவும். ரவையையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஊறவைத்துள்ள பிரட்டில் வெங்காயம், ரவை, அரைத்து வைத்துள்ள இஞ்சி பச்சைமிளகாய் விழுது, உப்பு, மிளகாய்தூள், கரம்மசாலா தூள், கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
பேக்கிங் டிஸ்ஸில் சமமாக வெண்ணெயை தடவவும்.
பிரட் கலவையில் 'என்னோ' புரூட் சாலட்டை கலந்து, அவற்றை பேக்கிங் டிஸ்க்கில் கொட்டவும்.
மைக்ரோ ஓவனில் மேற்பரப்பு பொன்னிறமாக வரும் வரை வேக வைக்கவும்.
பிறகு அதை சதுரவடிவில் வெட்டி எடுக்கவும்.
தக்காளி சட்னியை இதற்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |