கடவுளின் தன்மை
'கடவுள்' என்பது எல்லாவற்றையும் கடந்த ஒன்று, எல்லாவற்றுள்ளும் எங்கும் நிறைந் திருக்கும் சக்தி அல்லது பரமஉணர்வு. அண்டசராசரங்களும் உலகமும் உலகத்தில் இருக்கும் உயிர்களும் பிறபொருள்களும் அச்சக்தியின் வெளிப்பாடுகள். அதனால்தான் உலகெல்லாம் கடவுளின் படைப்பு எனப்படு கின்றது. இதைத் திருவள்ளுவர்

''அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு''

என்று கூறுகிறார். எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. அதுபோல் உலகில் உள்ளவைகள் எல்லாம் கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

கடவுள் அருவமானது, நம் கண்களுக்குப் புலப்படாதது. அதனால் நாம் கடவுளைப் பல்வேறு பெயர்களில் உருவங்களில் வழி படுகிறோம். ஓருருவம் ஓர்நாமம் இல்லானுக்கு ஆயிரம் திருநாமம் அன்றோ! நாம உருவங்கள் பல்லாயிரம் எனினும் இறைவன் ஒன்றே. இவ்வுண்மையை அறியாதவர்கள் தாம் வழிபடும் பெயரும் உருவமுமே கடவுள், தம் மதமே மதம், வேறு பெயர்களில் வழங்கப்படும் கடவுள் கடவுள் அல்ல. வேறு சமயம் சமயமன்று என்று கருதி மதவெறியராக மாறி உலக அமைதியைக் குலைத்து வருகின்றனர். கடவுளின் பெயரால் படுகொலைகள், வெடிகுண்டு வன்முறைகள். சமயச்சண்டைகளில் இறந்தவர்களின் எண் ணிக்கை இரு உலகப்போர்களில் மடிந்தவர் களைவிட அதிகமாகும். சமயவெறியர்கள் திருவள்ளுவரின் கருத்தை கற்றறிந்தால் உண்மையை உணருவார்கள்.

கடவுளின் தன்மை

திருவள்ளுவர் தம் திருக்குறளின் முதல் அதிகாரத்தில் கடவுளைப்பற்றிக் கூறியிருப்பது வருமாறு

இறைவன்

தூய அறிவு

அனைவரின் இதய கமலத்தில் வீற்றிருக்கும் பரம உணர்வு (super consciousness)

விருப்பு வெறுப்பு இல்லாதவர்

ஆசைகள் இல்லாத தன்மையர்

அறக்கடல்

தன்வயம், தூய்மை, இயற்கை உணர்வு, முற்றும் உணர்தல், பற்றின்மை, பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல், வரம்பில்லாத இன்பம் ஆகிய எண் குணம் உடையவன்.

இக்கருத்து எல்லாச் சமயங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுக் கருத்தாகும். இது சமய சமரசத்திற்குத் திறவுகோல்.

கல்வியின் பயன் யாது? அதன் பயன் அறிவு மலர்ச்சி. அறிவின் பயன் இறையமையணர்வு. இறைமையுணர்வு இல்லையெனில் பல கற்றும் பயன்இல்லை.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழஅர் எனின். (குறள் 2)


வழிபாட்டின் பயன்

தூய அறிவாகிய, அருள் மயமான ஆண்டவனை வழிபடுதலின் நற்பயன்கள் யாவை? அப்பயன்கள் வருமாறு:

இறைமையுணர்வு பெற்று எப்பொழுதும் அதில் மூழ்கித் திளைப்பவருக்கு எத்துன்பமும் இல்லை. விருப்பு, வெறுப்பு.விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி சேர்ந்தாரின் உள்ளத்தில் ஆசை அலை மோதல் இல்லை; மாறாக என்னும் பக்தி பரவசநிலை. எனவே அவரைத் துன்பங்கள் அணுகா. இறைவனின் நினைவு நிலை பெறும் உள்ளத்தில் கவலைக்கும் இடமில்லை.

அனைவரின் இதய கமலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை அடைந்தவர் நிலமிசை நீடு வாழ்வார்.

உடனே நாம் என்று கருதுவதால் உள்ளம் உடல் இரண்டின் செயல்களின் விளைவுகளுக்கு நாம் கட்டுப்படுகிறோம். கரும வினை என்பது இதுவே. கருமவினை இருக்கும் வரையில் பிறப்பு இறப்புச் சங்கிலித் தொடர் நீடிக்கும். ஆன்மா விடுதலை அடையமுடியாது. செய்யும் வினைகளை இறைவனுக்கு அர்ப்பணித்து எல்லாம் அவன்செயல், எல்லாம் அவனுடையது என்று அறிபவர் கருமவினையின்றி இன்ப துன்பமின்றி பிறவிக் கடலைக் கடக்கிறா. அவருக்கு மறுபிறப்பும் இறப்பும் இல்லை. இது இறைவனின் திருவடிகளை அடைந்தவர் அடையும் மற்றொரு பயனாகும். இது வீடுபேறு எனப்படும். இறைவனை அடையாதவரால் பிறவிக் கடலைக் கடக்க முடியாது.

கீழ்க்காணும் குறள் இக்கருத்தைப் புலப்படுத்துகிறது.

பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (குறள் 10)


கருமவினையின் கட்டுப்பாட்டால் நிகழும் பிறப்பு இறப்புச் சங்கிலித் தொடர் மிகமிக நீண்டது. எனவே அதைப் பெருங்கடல் என்றார் திருவள்ளுவர்.

கடலில் விழும் நீர்த்துளி கடலோடு கடலாக மாறுகிறது. அதுபோல் தான் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவின் ஒரு பாகம் என்பதை உணர்ந்தபின் அது அதில் இரண்டறக் கலந்து விடுகிறது. பக்தி பரவசத்தில் மூழ்கித் திளைத்து இறைவனடியைச் சேர்ந்த ஆழ்வார்கள் நாயன் மார்களின் வாழ்க்கையும் யோக மார்க்கத்தால் தாம் உடலன்று அதனுள் உறையும்.

டாக்டர் ஓ.ரா. கிருஷ்ணசாமி

© TamilOnline.com