மோர் ரசம்
தேவையான பொருள்கள்

மோர் - 2 கிண்ணம்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் - 2அல்லது 3

செய்முறை

மேலே கூறிய பொருட்களை வறுத்து, மிக்ஸியில் அரைத்து 2 கப் மோரில் கலக்கி, வேண்டிய அளவு உப்புச் சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளிக்க வேண்டும்.

அடுப்பில் மோர்திரியாமல் சுட வைத்து இறக்க வேண்டும்.

கருவேப்பிலை மஞ்சள் பொடி போட வேண்டும்.

மிக ருசியாக இருக்கும்.

அலமேலு ராமமூர்த்தி

© TamilOnline.com