தேவையான பொருள்கள்
பூண்டு பல் - 10 அல்லது 12 மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் தக்காளி - 2 மிளகாய் வற்றல் - 2 அல்லது 3 புளி - சின்ன எலுமிச்சை அளவு மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன் துவரம்பருப்பு - 1/2 கிண்ணம் வேக வைத்தது.
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் நன்றாக அறைத்துக் கொண்டு, வேக வைத்த துவரம்பருப்பை 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர்விட்டு கரைத்து, அரைத்த விழுதை போட்டு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து நுரைத்து வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும்.
பிறகு கடுகு தாளித்து கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு இறக்கி வைக்கவும்.
கமகம பூண்டு ரசம் ரெடி.
ஜலதோஷத்தின் போது மிகவும் நல்லது.
அலமேலு ராமமூர்த்தி |