முப்பருப்பு வடை
தேவையான பொருள்கள்

துவரம்பருப்பு - 1 கிண்ணம்
கடலை பருப்பு - 1 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1கிண்ணம்
குடமிளகாய் - 3
மிளகாய் வற்றல் - 5 அல்லது 6
இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
எண்ணெய் வடை பொறிப்பதற்கு - தேவையான அளவு

செய்முறை

முதலில் மூன்று பருப்புகளையும் 30 நிமிடம் ஊற வைக்கவும்.

பருப்பு நன்றாக ஊறியபின் அவற்றை களைந்து அதனுடன் இஞ்சி, மிளகாய் வற்றல், உப்பு போட்டு மிக்ஸியில் நறநற வென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடைமிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி இதனுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை, பெருங்காயப்பொடி ஆகியவற்றை அரைத்த மாவில் நன்றாக கலக்கவும்.

அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு அது நன்றாக காய்ந்தவுடன் மாவை வடைபோல் தட்டி போட்டு பொன் நிறத்தில் வேக வைத்து எடுக்கவும்.

இந்த வடை சாஸ¤டன் தொட்டு சாப்பிட மிக ருசியாக மொறு மொறு வென்றிருக்கும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com