தேவையான பொருள்கள்
பாதாம் பருப்பு - 1/2 கிண்ணம் பிஸ்தா பருப்பு - 1/2 கிண்ணம் முந்திரி பருப்பு - 1/2 கிண்ணம் சர்க்கரை - 1 1/2 கிண்ணம் பால் - 4 கிண்ணம்
செய்முறை
மூன்று பருப்புகளையும் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் பருப்புகளை நன்றாக களைந்துவிட்டு மிக்ஸியில் விழுதுபோல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த பருப்பில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு 1 1/2 கப் சர்க்கரையை அதில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு 4 கப் பால்விட்டு, ஏலக்காய், குங்குமபூ போட்டு ஆற வைத்து பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு: உங்களுக்கு எந்த பருப்பின் வாசனை அதிகமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பருப்பை 1 கப் போட்டு அரைக்கலாம். சர்க்கரை கொஞ்சம் குழைவாக இருந்தால் ருசி மிகவும் நன்றாக இருக்கும்.
இந்திரா காசிநாதன் |