பயத்தம் பருப்பு பாயசம்
தேவையான பொருட்கள்
பயத்தம் பருப்பு - 1/4 ஆழாக்கு கடலை பருப்பு - 1/4 ஆழாக்கு வெல்லம் (பொடி செய்தது) - 1/2 ஆழாக்கு ஏலப்பொடி - 2 ஸ்பூன் பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை முந்திரி பருப்பு - 5 அல்லது 6 காய்ச்சிய பால் அல்லது தேங்காய் பால் - 1 கரண்டி நெய் - 1/2 கரண்டி
செய்முறை
வாணலியில் கடலைபருப்பு, பயத்தம் பருப்பு இவற்றை லேசாக சூடு வரும்வரை வறுக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேகவிடவும்.
குக்கர் ஓசை வந்ததும் கீழே கீழே இறக்கவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து வெந்த பயத்தம் பருப்பு, கடலைபருப்பு இவற்றை எடுத்து கரண்டியால் நன்றாக மசித்து வெல்லப் பொடியை போட்டு கலந்து அடுபபில் வைத்து கொதிக்கவிடவும்.
வெல்லம் கரைந்ததும் கிழே இறக்கி வைத்து தேங்காய்பால் அல்லது காய்ச்சிய பாலை விடவும்.
முந்திரி பருப்பை ஒடித்து நெய்யில் வறுத்து அத்துடன் ஏலப்பெடியை போட்டு பாயசத்தில் கலக்கவும்.
குறிப்பு : ஜாதிக்காய், கிராம்பு இவற்றில் சிறிதளவு பொடி செய்து நெய்யில் வறுத்து போடலாம்).
இந்திரா காசிநாதன் |