விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்!
முன் கதை: Silicon Valley - இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, எதேச்சையாக யாரோ ஒருவரின் வீட்டில் நகை காணாமல் போன போது, துப்பறிந்து யார்எடுத்தது என்று கண்டுபிடித்து விடுகிறார். அன்றிலிருந்து அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, சூர்யா முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார்.

வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவிடமே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்!

ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுண ராகவும் பணிபுரிபவள். அவ்வப்போது தேவைப் படும் போது மட்டும் சூர்யாவுக்கு உதவுகிறாள்.

வரும் கதை: ஷாலினி சூர்யாவை ஒரு bio-tech நிறுவனத்துக்கு அவசரமாக அழைக் கிறாள். அவள் பங்கு நேரம் consulting வேலை புரியும் அந்த நிறுவனத்தில் பணி புரிந்த ஒரு விஞ்ஞானி காணாமல் போய் விடுகிறார். அவருடன், ஒரு மிக முக்கியமான மருத்துவ breakthrough ஆராய்ச்சி சம்பந்தமான ·பைல்களும், புள்ளி விவரங்களும் காண வில்லை. நிறுவனத்தார் விஞ்ஞானியே எடுத்துக்கொண்டுத் தலைமறைவாகி விட் டார் என்று சந்தேகிக்கின்றனர். ஷாலினிக்கு அவரை நன்றாகத் தெரியும். அவள் அப்படி இருக்காது என்று மறுத்து, சூர்யாவின் உதவியை நாடுகிறாள். சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்த போது விரிவுற்ற விபரீதம் என்ன?!

அடுத்த தென்றல் இதழில் பார்க்கலாம்!

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com