ஸான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பிரபல மான 'அபிநயா' நாட்டியக் குழுவின் இளையதலை முறையினர் வழங்கிய நடனநிகழ்ச்சி மே மாதம் 11ம் நாள், ஸான்ஹோஸே 'மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டரில் நடைபெற்றது. அபிநயாவின் இளம் நடனமணிகள் தங்கள் கலைத்திறனைக் காட்டும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சியில், தென் கலிபோர்னியாவின் 'சக்தி' நடனக்குழுவினரும் பங்கேற்றனர். அபிநயாவின் இயக்குநர் திருமதி. மைதிலிகுமார் வளைகுடாப் பகுதி நடனரசிகர் களிடையே மிகப் பிரபலமானவர். அவரிடம் நடனம் பயின்று அரங்கேறிய ஐம்பதுக்கும் மேற்பட்ட இளம் நடனக் கலைஞர்களில் செல்வியர் ராதிகா கண்ணன், சத்யஸ்ரீ எண்டுலுரி மற்றும் அமிபுச் ஆகியோர் இந் நிகழ்ச்சியை வழங்கினார்கள். இந்த நடன நிகழ்ச்சி யின் சிறப்பு என்னவெனில், ஒவ்வொரு இளம் கலைஞரும் தம் நடனத்திற்குன்டான பாடல் களைத் தாமே தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு நடன அமைப்பு கொடுத்து உருவாக்கியது மட்டு மல்லாது, அந் நடனங்களை விறுவிறுப்புடனும், பாவத்துடனும் ஆடி கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தனர். இளம் கலைஞர் அமிபுச் கூறியது போல திருமதி மைதிலி யிடம் நடனம் பயிலும்போது மாணவியர் அனை வருக்கும் அவரது சிறந்த நடன அமைப்பிற்கு ஆடுவது என்பது இயல்பாக கிடைத்த வரமாக இருந்தது.
ஒவ்வொரு நடனத்தையும் கருவிலிருந்து யோசித்து உருக்கொடுத்துச் செயலாற்றும் இந்த வாய்ப்பு அவர்களுக்கு ஒரு கண்திறப்பு அனுபவமாக அமைந்தது என்றால் மிகையாகாது.
தரத்தை வைத்துப் பார்க்கும்போது, இந் நிகழ்ச்சி இவர்களது முதல்முயற்சி என்று நம்பமுடியாத வகையில் இசை, நடனம், மேடை அமைப்பு ஆகிய பல விதங்களில் சிறந்து விளங்கியது. இளம் நடனக்கலைஞர் மூலருமே கடந்த பத்து, இருபது வருடங்களாக அபிநயாவில் நடனம் பயின்றவர்கள். செல்வியர் ராதிகாவும், சத்யஸ்ரீயும் 1995ல் நியூ யார்க்கில் நடைபெற்ற அகில உலக நடனவிழாவில் சிறந்த நாட்டியத்திற்கான பாலசரஸ்வதி விருதினைப் பெற்றுள்ளனர். நடனக் கலைஞர்கள் மூவரும்
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அபிநயா நடத்திய பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், அபிநயாவில் நடனம் கற்பித்தும் கலைப்பணி புரிந்து வருகிறார்.
சங்கீத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த செல்வி ராதிகா இசைக்கலைஞரும் கவிஞருமான தனது பாட்டனார் பி.வி. நடராஜன் இயற்றிய பாடல்களுக்கு தனது அன்னனையார் திருமதி வசந்தி கண்ணனின் இசையமைப்பில் நிருத்தம், லயம், பாவம் ஒன்றுசேர மிகச் சிறந்த முறையில் நடனமாடினார். ஐயப்ப சுவாமியின் சரித்திரத்தையும், ஐயப்ப பக்தர்களின் யாத்திரையையும் ராதிகாவின் விறுவிறுப்பான நடனம் பக்தி ரசம் சொட்ட சொட்ட ரசிகர்களின் கண் முன்னாள் நிறுத்தி வைத்தது. அன்னமாச்சாரியாரின் 'சேரியசோதா''விற்கு சத்யஸ்ரீ உணர்ச்சிகரமான பாவத்துடன் நடனமாடினார். ராதிகாவின் ஐய்யப்பன் கதையின் பின்னணியில் காட்டப்பட்ட பதினெட்டு படிகளின் அமைப்பும். சத்யஸ்ரீயின் நடனத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட விஸ்வரூபக் காட்சியும் ரசிகர்களை அயர வைத்துவிட்டன. கலைஞர்களின் மேடையமைப்புத் திறனுக்கு சபா'. சக்தியைப் போற்றும் செளந்தர்ய லஹரிக்கு விறுவிறுப்பான ஜதியமைப்புடன் அமிபுச் அபாரமாக ஆடினார். குஜராத் மொழியில் அமைந்த பஜனைப் பாடலுக்கு இவர் ஆடிய நடனம் நல்ல பாவத்துடன் அமைந்தது.
தென்கலிபோர்னியாவில் திருமதி விஜிபிரகாஷ் நடத்தி வரும் சக்தி நாட்டியக்குழுவின் இளம் கலைஞர் நால்வர் - திருமதி விஜியின் மகளான செல்வி மைதிலி பிரகாஷ் மற்றும் செல்வியர் சாயி பாட்டில், மனீஷா பரேக், நீலாமூர்த்தி ஆகியோர் - இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடினர். மைதிலி பிரகாஷ் தனித்து அடிய கிருஷ்ணாஞ்சலியும் ஊத்துக்காடு வெங்கடசுபையரின் பாடலான 'மதுர மதுர வேணுகீத'த்திற்கு சக்தி குழுவினர் அனைவரும் இணைந்து ஆடிய நடனமும் சிறப்பாக அமைந்தன. நிகழ்ச்சியின் நிறைவில், திருமதி ஆஷா ரமேஷ் இயற்றி இசை அமைத்த தில்லானாவிறகு ராதிகா, சத்யஸ்ரீ, அமி ஆகிய மூவரும் விறுவிறுப்பாகவிம் தேர்ந்த தாளக்கட்டுடனும் நடனமாடி தாங்கள் கைதேர்ந்த கலைஞூர்கள் என நிரூபித்துவிட்டனர். திரு நாராயணனின் வயலின் இசையும் திருமதி ஆஷாவின் இனிய குரலுடன் இணைந்து நடன நிகழ்ச்சிக்கு உயிரூட்டின.
வளர்ந்து வரும் இவ் இளம் கலைஞர்கள் நாளைய நடன உலகின் நாட்டியப் பேரொளிகள் ! இவர்களது கலை அன்னையாகிய திருமதி மைதிலி அவர்களும், இவர்களது பெற்றோர்களும் இந்நிகழ்ச்சி கண்டு ஈன்றபொழுமினும் பெரிதுவப்பு கொண்டனர் என்பதில் சந்தேகமில்லை!
அருணா |