தேவையானவை
கோழி - 300கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) பட்டை - 2 உப்பு - தேவையான அளவு முந்திரி & பாதாம் - ஒரு கை அளவு அரைத்தது இஞ்சி & பூண்டு - விழுது 2 ஸ்பூன் வெங்காயம் - தேவையான அளவு பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் மல்லிதூள் - 1 ஸ்பூன் வெண்ணை - 3 ஸ்பூன் எண்ணை - 2 ஸ்பூன் தக்காளி - 2 (தோல் நீக்கி சுத்தம் செய்து அறைத்தது)
செய்முறை
வெங்காயத்தை எண்ணை விட்டு பட்டையை போட்டு வதக்கவும். இஞ்சி & பூண்டு விழுதை சேர்க்கவும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்
நன்கு கிளறவும் மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, மல்லி பொடி,உப்பு சேர்த்து கிளறவும்
தக்காளி, முந்திரி & பாதாம் விழுது இவற்றை தண்ணீர் விட்டு நன்கு கிளறவும்
கலவை வேக ஆரம்பித்தவுடன் கறியை விட்டு நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்
கறி வெந்து கெட்டியானவுடன் அணைப்பதற்கு முன் வெண்ணையை கலந்து இறக்கவும்
ஆனந்த பாரதி |