திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
பெருந்தலைவர் 'காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ரமணா கம்யூனிகேஷன்ஸ் 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரசில் முக்கிய தலைவருமான மறைந்த ஜி.கே. மூப்பனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க விருக்கிறது.

அரசியல் சாதுர்யம், சாணக்கியம் என்று எதுவும் இல்லாமல் நேர்மையான வழியில் அரசியல் நடத்திய மூப்பனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெளிவருவது மிகப் பொருத்தமானது.

'காமராஜ்' படத்தை இயக்கிய அ. பாலகிருஷ்ணன் இத்திரைப் படத்தையும் இயக்கவிருக்கிறார். பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த மூப்பனார், தியாகத்தை வலியுறுத்தும் காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனது முதல் இந்திய தேசத்தில் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்த தருணம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இத்திரைப் படத்தில் இடம்பெறவுள்ளது.

இன்றைய முன்னணி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒத்துழைப் போடு தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com