மேதி கூட்டு
தேவையான பொருட்கள்

வெந்தய கீரை - 2 கட்டு
பயத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
தேங்காய் துறுவல் - 6 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

செய்முறை

பயத்தம் பருப்பை நன்றாக களைந்து கொள்ளவும்.

வெந்தய கீரையை பொடி பொடியாக நறுக்கி இவ்விரண்டையும் குக்கரில் வைத்து வேக விடவும்.

தேங்காய் துறுவல், சீரகம், பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரிலிருந்து வெந்த கீரையையும், பருப்பை யும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் விழுதை வெந்த கீரையில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்.

அதிகப்படியான தண்ணீர் இருந்தால் அரிசி மாவை துவி கிளறவும்.

பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடுகு ஆகியவற்றை நெய் அல்லது எண்ணெய்யில் தாளிக்கவும்.

வயிற்றில் புண் இருந்தால் இக்கீரையை சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு

உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல், 1ஸ்பூன் மிளகு, வறுத்து, தேங்காயுடன் அரைத்தும் கூட்டு செய்யலாம்.

தேங்காய் இல்லாவிட்டால் 10 அல்லது 12 முந்திரி பருப்பு போட்டு அரைக்கவும்.

மிகவும் ருசியாக இருக்கும்.

பருப்பு சாம்பாருக்கு கறிகாய் இல்லை என்றால் வெந்திய கீரை யை போட்டு சாம்பார் செய்யலாம். சாம்பார் மிகவும் வாசனையாக இருக்கும்.

தக்காளி, வெங்காயத்துடன் வெந்தய கீரையையும் போட்டு வதக்கி தயிரில் கலந்தால் தயிர்பச்சடி ரெடி. ரொம்ப ருசியாக இருக்கும்.

வைதேகி திருமலை

© TamilOnline.com