தேவையான சாமான்கள்
பாசுமதி அரிசி - 1 1/2 கிண்ணம் வெந்திய கீரை - 2 கட்டு தக்காளி - 2 வெங்காயம் - 2 நெய் அல்லது எண்ணெய் - 6 அல்லது 8 ஸ்பூன் லவங்கபட்டை - 1 துண்டு ஏலக்காய் - 6 லவங்கம் - 8 அல்லது 10 சோம்பு - 1 ஸ்பூன் முந்திரி, திராட்சை உலர்ந்தது - சிறிதளவு
செய்முறை
பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு மசாலா சாமான்களை ஒரு தட்டு தட்டி போடவும்.
நன்றாக வறுபட்டதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதக்கவும்.
வதங்கியவுடன் அதில் நறுக்கிய தக்காளி, வெந்தயக்கீரையை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் நெய்விட்டு, ஊற வைத்த அரிசியை வடிகட்டி போட்டு, 10 நிமிடம் வறுத்து 1:2 என்ற கணக்கில் தண்ணீர்விட்டு, வதக்கி வைத்திருக்கும் கீரை சாமான்களை கலந்து குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து போடவும்.
கமகம மேதிபுலாவ் ரெடி!!
குறிப்பு
குக்கரில் 4 சொட்டு எலுமிச்சை சாற்றை போட்டு வைத்தால் புலாவ் உதிரியாக இருக்கும்.
வைதேகி திருமலை |