காளான் கிரேவி
தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடிப் பொடியாக நறுக்கியது)
காளான் - 2 கிண்ணம் (சுத்தமான காளான்)
வெள்ளை பூண்டு - 3
மிளகாய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 7
இஞ்சி - பெரிய அளவு
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
தனியா பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுபொடி - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1/4 கிண்ணம் - தக்காளியை வேகவைத்து தோல்நீக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்தது.
இளநீர் - 1/4 கிண்ணம்
கொத்தமல்லி - தேவைக்கேற்ப பொடிபொடியாக நறுக்கியது.
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

மேலேகூறிய பொருட்களில் காளான், தக்காளியை தவிர மற்ற எல்லாவற்றையும் நன்றாக விழுதுபோல் அரைத்துக் கொள்ளவும்.

அடிகனமான panல் எண்ணெய்யைவிட்டு அரைத்துவைத்த விழுதுகளை போட்டு பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்க வேண்டும்.

பச்சை வாசனை போனபின்பு அதில் காளானை போட்டு நன்றாக கலக்கி வேக விடவும்.

இக்கலவை பாதிவெந்தவுடன் தயாராக வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து தேவையான உப்பை போடவும்.

panஐ மூடி 5 அல்லது 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.

தேவையெனில் 1/4 கப் இளநீரை கடைசியில் சேர்க்கவும். இல்லாவிட்டால் சிறிது நீர் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.

கடைசியில் துண்டுதுண்டாக நறுக்கிய கொத்தமல்லியை அதன் மேல் தூவவும்.

இதை சூடாக பரிமாறவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com