வெண்டைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 20 (இளசானது)
மிளகாய்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம்மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் உலர்ந்த அரிசி மாவு, மிளகாய் பொடி, கரம்மசாலா ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

பிறகு ஒவ்வொரு வெண்டை காயின் நுனியை வெட்டிக் கொள்ளவும்.

ஒவ்வொரு வெண்டை காயின் நடுவில் ஒரே அளவில் கீறி கலந்து வைத்த மசாலாவை வைப்பதற்கு வசதியாக வெட்டிக் கொள்ளவும்.

3 அல்லது 4 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்யை விட்டு எல்லா வெண்டைக் காயை மைக்ரோஓவனில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

வேகவைத்த வெண்டைக்காயை எடுத்து நான்ஸ்டிக் panல் போட்டு, தேவையெனில் சிறிது எண்ணெய்விட்டு அடுப்பை சிறிதாக எரியவிட்டு நன்றாக வதக்கவும்.

இது சாதத்திற்கும், சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்வதற்கு நன்றாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com