மதூர் வடை
தேவையான பொருட்கள்

மைதா மாவு - 2 கிண்ணம்
ரவை - 1/2 கிண்ணம்
அரிசி மாவு - 1/2 கிண்ணம்
வெங்காயம் - 1 (பொடிபொடியாகநறுக்கியது)
கொத்தமல்லி, கறிவேப்பிலை - கைப்பிடி அளவு (பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 3 (துண்டு துண்டாக நறுக்கியது)
சமையல் சோடா - சிறு துளி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் மைதாமாவு, ரவை, அரிசிமாவு, ஆகியவற்றுடன் பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் கொண்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

மாவு அதிககெட்டியாக இருக்க வேண்டாம்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

உருண்டைகளை மெல்லிய வடை போல் செய்து கொள்ளவும்.

வாணலியில் வடை மூழ்கும் அளவுக்கு எண்ணெய் விட்டு வேகவிடவும்.

எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் ஒவ்வொரு வடையும் எண்ணெய்யில் விட்டு நன்றாக வேகவிடவும்.

இப்போது வடை தயார். இதற்கு கொத்த மல்லி சட்னி தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com