பன்னீர் டிக்கா
தேவையான பொருட்கள்

பன்னீர் - 1 கிண்ணம்
உருளைகிழங்கு - 2 (வேக வைத்து நன்றாக மசித்தது)
பிரெட் - 2 துண்டு
பச்சை மிளகாய் - 2 துண்டு துண்டாக நறுக்கியது
வெங்காயம் - 1 (பொடி பொடியாக நறுக்கியது)
மக்காச்சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன் (பொடி செய்தது)
கரம்மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

பன்னீர் செய்யும் முறை

தேவையானவை

பால் - 2 கிண்ணம்
ஏடுபடிந்த தயிர் - 1/2 கிண்ணம்

செய்முறை

வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலை பன்னீர் தயாரிப்புக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நீங்கள் தயாரிக்கும் பன்னீர் நல்ல தரத்துடன் இருக்காது.

முதலில் பாலை அடிகனமான பாத்திரத்தில் வைத்து நன்றாக காய்ச்சவும். நன்றாக கிளறவும்.

பால் நன்றாக காய்ந்தவுடன் அடுப்பை சிறிய தாக எரியவிடவும்.

பிறகு அதில் தயிரை விடவும்.

தயிர் சேர்த்தப்பின் பாலை அடிக்கடி கிளறக்கூடாது.

இப்போது பால் தயிராக மாறி வரும்.

முழுமையாக தயிராக வந்தவுடன் அடுப்பி லிருந்து இறக்கி வைக்கவும்.

இதை ஒரு வடிதுண்டின் மூலம் வடிகட்டவும்.

பால் திரிந்து போன பின் மேலே காணும் திரவத்தை சப்பாத்திக்கு மாவு கலப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றாக தூய்மையான மஸ்லின் துணியில் பன்னீரை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கட்டிவிடவும்.

இரண்டு மணி நேரம் கழித்து பன்னீரை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் ஏதாவது கனமான பொருள் ஒன்றை வைக்கவும். இதனால் அதில் இருக்கும் சிறிதளவு நீரும் வெளிவரும்.

இப்போது பன்னீர் ரெடி.

செய்முறை

முதலில் பிரெட் துண்டுகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். பிரெட் துண்டுகள் நன்றாக ஊறியவுடன் தண்ணீரி லிருந்து வெளியே எடுக்கவும்.

பிறகு பிரெட்ச்- துண்டுகளை நன்றாக மசிக்கவும்.

இப்போது நன்றாக மசித்து வைத்துள்ள உருளைகிழங்கு, பச்சைமிளகாய், வெங்காயம், கரம்மசாலா, கறிவேப்பிலை மற்றும் சோளமாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

பிறகு வடைக்கு செய்வதுபோல் கையால் தட்டி வட்டமாக செய்யவும்.

தாவாவில் சிறிது (1 டேபிள் ஸ்பூன்) எண்ணெய்விட்டு சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானவுடன் அடுப்பை நிதானமாக எரியவிடவும்.

4 அல்லது 5 உருண்டைகளை தாவாவின் மேல் வைத்து நன்றாக வேக விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேகவிடவும்.

மேற்கூறியவாறு மீதமுள்ள உருண்டை களையும் வேகவிடவும்.

இது சுடாக சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள இனிப்பு சட்னி நன்றாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com