தோசை பிட்ஸா
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - வேண்டிய அளவு
துறுவிய சீஸ் - கொஞ்சம்
வெங்காயம் - கொஞ்சம் துறுவியது
குடை மிளகாய் - கொஞ்சம் துறுவியது
காரட் - கொஞ்சம் துறுவியது
கொத்தமல்லி
அல்லது பார்ஸ்லி - பொடியாக நறுக்கியது

செய்முறை
தோசைக்கல்லில் ஒரு தோசை வார்க்கவும் உடனேயே வேண்டிய அளவு துறுவிய வெங்காயம், குடைமிளக்காய், காரட் தூவி அதன் மீது சீஸ் கொஞ்சம் மற்றும் கொத்தமல்லி அல்லது பார்ஸ்லி இலை கொஞ்சம் தூவி தோசையை சுற்றி கொஞ்சம் எண்ணெய் விட்டு தோசையை திருப்பி போடாமல் எடுக்கவும். இவ்வாறு எல்லா தோசைகளையும் வார்த்து எடுக்கவும். சாப்பிடும் போது தக்காளி சாஸ் விட்டுக் கொண்டு சாப்பிடவும். சாஷேயில் (sachet) சாஸ் எடுத்து சென்றால் சாப்பிடும்போது விட்டுக் கொள்ள செளகரியமாக இருக்கும்

பீட்டா ப்ரெட் பிட்ஸா

தேவையான பொருட்கள்:
பீட்டா ப்ரெட் - 2
துறுவிய சீஸ் - தேவையான அளவு
தக்காளி சாஸ் - தேவையான அளவு
லெட்டூஸ், குடைமிளகாய்,
காரட் காய்கறிகள் - பொடியாக (Julliene) நறுக்கியது கொஞ்சம்
பதப்படுத்திய பச்சை
அல்லது பழுத்த லிவ் - கொஞ்சம்

செய்முறை
ஒரு பீட்டா ப்ரெட்டை எடுத்து அதன் பாக்கெட்டில் தேவையான அளவு சீஸ் துருவல், லிவ், காய்கறி அடைத்து கொஞ்சம் தக்காளி சாஸையும் விட்டு இதை அலுமினியம் ஃபாயிலில் (foil) வைத்து சுருட்டி ஓவனில் 350 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் 5-7 நிமிடம் வைத்து எடுக்கவும். இதே போல் அடுத்த பீட்டா ப்ரெட்டையும் bake செய்யவும்.

கொத்தமல்லி அல்லது பார்ஸ்லி இலை களையும் பீட்டா பிரெட்டினுள் வைக்கலாம். இதை டோ ஸ்டர் ஓவனிலேயே செய்யலாம்.

ஸேமியா சாலட்

தேவையான பொருட்கள்
ஸேமியா - தேவையான அளவு
லிவ் நறுக்கியது - கொஞ்சம்
தக்காளி நறுக்கியது - கொஞ்சம்
பார்ஸ்லி,
ரோஸ்மேரி இலைகள் - கொஞ்சம்
பறங்கி விதை,
பைன் விதை,
சூரிய காந்தி விதை
(pumpkin nuts, pine nuts,
sunflower seeds) - கொஞ்சம்
மிளகு பொடி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
லிவ் ஆயில் - 1 1/2 தே. கரண்டி

செய்முறை
ஸேமியாவை பாக்கெட்டின் மேலுறையில் கொடுத்துள்ள குறிப்பின் படி வேகவைத்து வடிகட்டி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மற்ற எல்லா பொருட்களையும் அதன் மீது போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

காய்கறி ப்ரெட் கலவை

ப்ரெட் ஸ்லைஸ் - 2
பிடித்த அல்லது
கைவசமுள்ள காய்கறி
பொடிதாக நறுக்கியது - 1 கிண்ணம்
வெங்காயம், தக்காளி
பொடியாக நறுக்கியது - 1/4 கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1
மிளகு பொடி
அல்லது நறுக்கிய
பச்சை மிளகாய் - தேவையான அளவு
கரம் மசாலா
பவுடர் - 1/4 தே.கரண்டி
ஆலிவ் ஆயில் - 1 தே.கரண்டி

செய்முறை
ப்ரெட்டை உதிர்த்து கொண்டு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி பின் மேற்கூறிய எல்லா பொருட்களையும் போட்டு ஒன்று சேர பிசைந்து நுண்அலை அடுப்பில் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அதிக திறனில் காய்கறிகள் வேகும் வரை வைத்து (4-5 நிமிடங்கள்) வைத்து பின்னர் அதை வெளியில் எடுக்காமல் அடுப்பினுள்ளேயே 5 நிமிடங்கள் வைத்து பின்னர் எடுக்கவும்.
வேக வைக்கும் கால அளவு அவரவர் நுண்ணலை அடுப்பின் சக்தியை பொறுத்தது.

பாட்லி பாஜி
இதில் பாவிற்கு (Pav) பதிலாக இட்லியை உபயோகிக்க வேண்டும்

தேவையான பொருட்கள்
இட்லி - 4
வெந்து துறுவிய
உருளைக்கிழங்கு - 1
துறுவிய சீஸ் - கொஞ்சம்
துறுவிய காரட்,
குடை மிளகாய்,
வெங்காயம் - 1/2 கிண்ணம்
தக்காளி சாஸ்
அல்லது கெட்சப் - 4 தே. கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் அல்லது
ஆலிவ் எண்ணெய் - கொஞ்சம்

செய்முறை
துறுவிய காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
இட்லியை பாவை (Pav) வெட்டுவது போல குறுக்காக இரண்டு பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இந்த இரு பாதியின் இரண்டு பக்கங்களிலும் கொஞ்சம் வெண்ணெய் தடவவும். ஒரு பாதியை நான் - ஸ்டிக் கல்லில் போட்டு மிதமான தீயில் வைத்து இட்லி மீது வெந்த காய்கறி கொஞ்சம், தக்காளி சாஸ் கொஞ்சம் விட்டு பின் கொஞ்சம் சீஸ் துறுவல் தூவவும். இதன் மீது மற்ற பாதியை இட்லியை வைத்து ஒரு கரண்டியால் அமுக்கினால் நன்றாக ஒட்டிக்கொண்டு விடும். ஒரு அரை நிமிடம் மிகக்குறைந்த தீயில் வைத்து எடுக்கவும். இது போல் எல்லா இட்லிகளையும் செய்யவும். இட்லியின் இரு புறமும் பொன்னிறமாக இருக்க வேண்டும்.

ப்ரெட்டில் வைப்பது போல சப்பாத்தியில் peanut butter, jelly தடவி சுருட்டி கொடுக்கலாம்.
உருளைக்கிழங்கு வெங்காய கறி வைத்தும் சுருட்டி கொடுக்கலாம். மாக்ரோனி சீஸ் செய்வதும் மிக எளிது.

பருப்பு பொடி சாதம், எலுமிச்சை சாதம் செய்து தரலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com