மே மாதம் இரண்டாவது ஞாயிறை 'அன்னையர் தினம்' என்றும், ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறை 'தந்தையர் தினம்' என்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழு வதிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அன்னையின் சிறப்புகளை எத்தனையோ இலக்கியப் படைப்புகள், எம்ஜிஆர் படப்பாடல்க மூலமாக நமக்கு நன்கு எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆனால் அப்பாக்கள்தான் பாவம். அவர்களின் கதையை எழுத மறந்துவிட்டன எல்லா பேனாக்களும். அப்பாக்களை பொல்லா தவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் கதை களும், சினிமாக்களும் சித்தரிக்கின்றன.
தந்தைகள் குழந்தைகளை வளர்க்க எத்தனை யோ தியாகங்கள் செய்ய வேண்டி இருக் கின்றது. குழந்தைகள் படிக்க, திருமணத்திற்கு பணம் சேர்க்க என்பது போன்ற பல முக்கியப் பொறுப்புகளிலேயே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் கழிந்துவிடுகின்றது. அலுவலக வேலை, மற்ற பல பிரச்சனைகள் என்று பல அலைச்சல்களுக்கு நடுவில் குழந்தைகளுடன் கொஞ்சிவிளையாட நேரேமேது?
வேலைக்குப் போகும் என் தோழியர் பலர் குழந்தையை விட்டு பிரிவது மனத்திற்கு கஷ்டமாக இருக்கின்றது என்பார்கள். அப்பாக்கள் எல்லாம் அந்தத் தியாகத்தை எத்தனையோ தலைமுறைகளாகச் செய்கிறார் களே! ஆய்ந்து, ஓய்ந்து ஓய்வு பெறும்நாளில் குழந்தைகள் வளர்ந்து வீட்டைவிட்டுப் போய் விடுகின்றார்கள். இந்தக் காலஅப்பாக்களைப் பற்றிச் சொல்லித் தீராது. பிரசவத்திற்கு உடன் இருப்பது முதல் 'டைபர்' (DIAPER) மாற்றுவது, சாதம் ஊட்டுவது என்று தாயுமானவர்களாகவும் இருக்கின்றார்கள்.
''பெண்டாட்டிக்கு புடவை துவைத்து போடு பவன்'' என்று சமுதாயம் கிண்டல் செய்வதைப் பொறுப்படுத்தாமல் குடும்ப வேலைகளைச் செய்கின்றார்கள். வேலைக்குப் போகும் இந்தக் காலப்பெண்களின் கஷ்டங்களை எழுதும் எவரும் ஆண்களின் நிலையை எழுதுவது இல்லை.
அம்மாக்களைப்போல், அப்பாக்கள் குழந்தை களிடம் அதிகம் பேசுவது இல்லை. சில வீடுகளில் அம்மா மூலமாகத்தான் அப்பாவும், பிள்ளையும் பேசிக் கொள்வார்கள். பருவம் அடைந்த தன் மகளுடன் பேச தந்தைக்கு சங்கோஜம். சில வீடுகளில் குழந்தையை மிரட்ட 'அப்பா வந்தால் அடிப்பார்'' என்பார்கள். அன்பிற்கு அம்மா, கண்டிப்பிற்கு அப்பா என்று ஆவதால் குழந்தைகளுக்கு அப்பா 'சிம்ம சொப்பனம்' ஆகிவிடுகின்றார். தோளுக்கு மேல் வளர்ந்ததும் தோழனாக முடிவதில்லை அவரால்!
''அம்மா இங்கே வா வா'' என்ற பாடலை ''அம்மா அப்பா இங்கே வாங்க'' மாற்றிப் பாடினால் என்ன என்று தோன்றூகிறது!
தந்தையர் தினவரலாறு
அன்னையர் தினம் ஐரோப்பாவில் 1600வது ஆண்டு முதலே கொண்டாடப்பட்டு வந்தது. அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2வது ஞாயிறை கொண்டாடி வந்தார்கள். இதைப் பார்த்த வாஷிங்டன் மாநில sporaneso ஐ சேர்ந்த சனேரா ஸ்மார்ட் டாட் என்பவர் 1900, ஜூன் 19ஐ தந்தையர் தினமாகக் கொண்டாட ஆரம்பித்தார். சிறு வயதில் அன்னையை இழந்து தந்தையால் வளர்க்கப்பட்ட இந்தப் பெண்மணி ஆரம்பித்த வழக்கம் நாடு முழுவதும் பரவியது. 1914 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோவ் வில்சன் மே இரண்டாவது ஞாயிறை அன்னையர் தினம் என்றும் 1924ம் ஆண்டு ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறை தந்தையர் தினம் என்றும் பிரகடனப் படுத்தினார்கள்.
இந்த ஆண்டு மே 12 அன்னையர் தினம், ஜூன் 15 தந்தையர் தினம்.
மீரா சிவகுமார் |