கண்டந் திப்பிலி (மோடிக்குச்சி) ரசம்
தேவையான பொருட்கள்

கண்டந்திப்பிலி - 2 கரண்டி
துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - 1
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
தனியா - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 கட்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்

செய்முறை

துவரம் பருப்பை ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைத்து மசித்து தெளிவான பருப்புத் தண்ணீர் எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும். மிளகு, சீரகம், தனியா, கடலைபருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.

கண்டந்திப்பிலியை ஓரளவு எண்ணெயில் பொரித்து அதை தனியாக மிக்ஸியில் பொடி செய்யவும். புளி, தக்காளி இவற்றை கரைத்து ஈயச் சொம்பில் விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பருப்பு தண்ணீர் விட்டு மிக்ஸியில் பொடி செய்தவற்றை (கண்டந்திப்பிலி நீங்கலாக) போட்டு தேவையான அளவு நீர் விட்டு பொங்கி வந்ததும் கீழே இறக்கி கண்டந் திப்பிலி பொடியை போட்டு கிளறவும். கடுகு, சீரகம் தாளிக்கவும். கொதிக்கும் போது கண்டந்திப்பிலியை போட்டால் கசந்துவிடும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்

© TamilOnline.com