துவரம் பருப்பு அரைத்துவிட்ட ரசம்
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - 1
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு, சீரகம் - தாளிக்க
உப்பு - தேவையானது
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றுடன் ஊறிய துவரம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

புளி, தக்காளி இவற்றை கரைத்து ஈயச்சொம்பில் விட்டு கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் மிக்ஸியில் அரைத்த விழுதை தேவையான தண்ணீர்விட்டு கரைத்துவிட்டு பொங்கி நுரை வந்ததும் கீழே இறக்கி கடுகு தாளித்து மூடி வைக்கவும்.

குறிப்பு: துவரம் பருப்பு விழுதை போட்டதும் அருகிலேயே இருந்து கவனித்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொங்கி வழிந்து விடும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்

© TamilOnline.com