மைசூர் ரசம்
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிதளவு
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 2

செய்முறை

புளி, தக்காளி இவற்றை கரைத்து ஈயச் சொம்பில் விடவும். உப்பு, பச்சைமிளகாய், பெருங்காயம் இவற்றை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். துவரம் பருப்பை வேகவைத்து மசித்து தெளிவான பருப்பு தண்ணீரை எடுத்து வைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, தனியா, மிளகு, மிளகாய் வற்றல் இவற்றை பொன்னிறத்தில் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் தேங்காய் பால், பருப்பு தண்ணீர் இவற்றை சேர்த்து கொதிக்கும் ரசத்தில் விட்டு பொங்கி நுரை வந்ததும் கீழே இறக்கி வைக்கவும். கடுகு, சீரகம் தாளித்து கொத்தமல்லி போட்டு கிளறி மூடவும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்

© TamilOnline.com