தேவையான பொருட்கள்
வேப்பம் பூ - 1 கரண்டி புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு தக்காளி - 1 மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 பெருங்காயம் - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு கடுகு - 1 ஸ்பூன் உப்பு - தேவையானது
செய்முறை
புளி, தக்காளி இவற்றை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கரைத்து ஈயச் சொம்பில் விடவும். உப்பு, பெருங்காயம் போட்டு பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிபோட்டு 5 நிமிடங்கள் புளிவாசனை போக கொதிக்க விடவும். பிறகு தேவையான நீர் சேர்த்து பொங்கிவந்ததும் கீழே இறக்கி வைக்கவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை கருநிறமாகும் வரை பொரித்து ரசத்தில் போடவும். கடுகு, மிளகாய் வற்றலை தாளிக்கவும். கொத்தமல்லி போட்டு கிளறி மூடவும்.
குறிப்பு: தேவையானால் பருப்பு வேக வைத்து போடலாம். கொதித்து கொண்டிருக்கும் ரசத்தில் வேப்பம்பூ போட்டால் கசந்துவிடும். வேப்பம்பூ சரியாக வறுபடவில்லை என்றாலும் ரசம் கசக்கும்.
இந்திரா காசிநாதன், உமா நடராஜன் |