தேவையான பொருட்கள்
எலுமிச்சம் பழம் - 1 துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு பச்சை மிளகாய் - 4 மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன் துவரம் பருப்பு - 2 ஸ்பூன்(பொடி செய்ய) கொத்தமல்லி - சிறிதளவு கடுகு - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை
துவரம்பருப்பை 1 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்து மசித்து தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். 1 டம்ளர் தண்ணீரில் மஞ்சள் பொடி, உப்பு போடவும், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை துண்டுகளாக்கி, பெருங்காயம் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் மஞ்சள் பொடி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு பருப்பு தண்ணீரை விட்டு பொங்கி நுரை வந்ததும் கீழே இறக்கி வைக்கவும். மிளகு, சீரகம், துவரம்பருப்பு இவற்றை பொடி செய்து போடவும். கொத்தமல்லி போட்டு கடுகு தாளிக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து ரசத்தில் விட்டு கிளறி மூடவும்.
குறிப்பு: எலுமிச்சம் பழத்தை ரசம் சிறிது ஆறியவுடன் பிழிந்து விடவேண்டும். இல்லை யென்றால் ரசம் கசந்துவிடும்.
இந்திரா காசிநாதன், உமா நடராஜன் |