மிளகு ரசம்
தேவையான பொருட்கள்

புளி - சிறு எலுமிச்சை அளவு
தக்காளி - 1
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையானது

செய்முறை

புளி, தக்காளி இவற்றை கொதிக்கும் நீரில் உற வைத்து, நன்றாக கரைத்து ஈயச் சொம்பில் ஊற்றவும். தேவையான உப்பு சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். மிளகு, சீரகம், துவரம் பருப்பு இவற்றை பொடி செய்யவும். ரசம் புளிவாசனை போக கொதித்ததும் தேவையான அளவு நீர்விட்டு பொங்கி வந்ததும் கீழே இறக்கவும். மிளகு, சீரக பொடியை போட்டு கடுகு தாளிக்கவும். கருவேப்பிலை போடவும். நெய்யில் தாளித்தால் வாசனையாக இருக்கும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்

© TamilOnline.com