தேவையான பொருட்கள்
புளி - சிறு எலுமிச்சை அளவு தக்காளி - 1 சாம்பார்பொடி - 1 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு பச்சைமிளகாய் - 2 கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு கடுகு, சீரகம் - தாளிக்க உப்பு - தேவையானது
செய்முறை
துவரம்பருப்பை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். புளி, தக்காளி இவற்றை வெந்நீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து ஈயச் சொம்பில் விடவும். உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயம், பச்சைமிளகாய் இவற்றுடன் ஊற வைத்த துவரம் பருப்பையும் போட்டு அடுப்பை நிதானமாக எரியவிட்டு 5 அல்லது 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தேவையான அளவு நீர்விட்டு பொங்கி நுரை வந்ததும் கீழே இறக்கி வைக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.
இந்திரா காசிநாதன், உமா நடராஜன் |