இளமை கொலுவிருக்கும் உற்சவம்
Youthsava2002

அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துவரும் இந்தியர்களளிடயே எழும் பல தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் மேன்மைகாகக் பாடுபடும் நிறுவனமாக அமைந்துள்ளது ICSC-INDO -AMERICAN COMMUNITY SERVICE CENTRE.1998ம் ஆண்டில் ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியிலுள்ள(San francisco Bay Area)ஸான்டா கிளாரா(SantaClara) நகரில் ICSC துவங்கப்பட்டது. ஆரம்ப நாட்களில் இந்திய முதியோர் (Seniors) சந்தித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தமது தேவைகளை நிறைவேற்றும் வகைமுறைகளை உருவக்கவும் ICSC உதவியது. விரைவில் ICSC, இளையோர், முதியோர் என்று வயது பாகுபாடின்றி அன்னிய மண்ணீல் தமது வாழ்வினை அமைத்துக் கொண்ட இந்தியர் அனைவருக்கும் சமூகத் தொண்டும் கலைத் தொண்டும் புரிந்து வர ஆரம்பித்து வேலை முன்னேற்றம் (Professional Develepment), வேலை தேடுதலில் உதவி (Job Search), கம்ப்பூட்டர் பயிற்சி (Computer Skills), உயர் கல்வி நிலையங்களில் நுழைவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள்(College Admission Seminars), ஆரோக்கியம் (Health Issues), குடும்பசூழலில் வன்முறை தவிர்ப்பு (Counselling on preventation of domestic violence), என்று பல்வேறு வகையிலும் உதவி , சமூகப் பணியாற்றி வரும் நிறுவனமகா ICSC திகழ்கின்றது. ICSC ஆற்றிவரும் பல்வேறு சமூகபணீகளைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அவர்களது வலைமையத்தை (Web-Site) தொடர்பு கொள்ளவும். அதன் முகவரி http://www.indo-american.org


ICSC ஆண்டுதோறும் நடத்தி வரும் போட்டிகள் பல உண்டு இவற்றுள் சில `youthsava' நடனப் போட்டி, Spelling bee / Vocabulary போட்டி, Math Wizzard கணிதப் போட்டி ஆகியவை இளம் தலைமுறையினரின் கல்வியறிவையும் கலைத்திறனையும் ஆதரித்து வளர்த்து வரும் வகையில் ICSC இப் போட்டிகளை நடத்தி வருகிறது. 'உத்சவம்' என்கிற சமஸ்கிருத சொல்லை 'Youth' எனும் ஆங்கிலச் சொல்லுடன் இணைத்து 'Youth Seva' என்று பெயர் கொடுத்து ICSC வருடம் தோறும் நடத்தி வரும் நடனப் போட்டி இந்த வருடமும் ஜூன் மாதம் 1ம் தேதியன்று ஸன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு ஆரம்பித்த இப்போட்டியை ஸன்னிவேல் நகர மேயர் Fred Fowler அவர்களும், துணை மேயர் Julia Miller அவர்களும் துவக்கி வைத்து அந்நிய மண்ணில் இந்தியக் கலாச்சாரத்தை பிரபல படுத்துவதற்கான இம் முயற்சியைப் பாராட்டிப் பேசினர். சுமார் முப்பதிற்கும் மேலான நடனங்கள் இடம் பெற்ற இந் நிகழ்ச்சியில் 7 லிருந்து 18 வயது நிரம்பிய இருநூறுக்கும் மேலான இளைஞர்கள் பங்கேற்றனர். வண்ணமிகு உடைகளில் பட்டாம் பூச்சிகளாக இளையோர் நடனமாடியது கண்களைக் கவர்ந்தது Folk, திரைஇசை, பாரம்பரிய நடனம் என்று பல்வேறு பிரிவுகளிலும் போட்டி நடைபெற்ரது. வளர்ந்து வரும் இளைய தலைமுறையின் கலையார்வத்தை வளர்ப்பது மட்டுமல்லாது, ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பது, கூட்டணியாகச் செயல் படுவது போன்ற நற்பண்புகளை அவர்களிடம் உருவாகி வருவதற்கும் 'Youth Seva' போன்ற போட்டிகள் பயன்படுகின்றன என்று ICSC ந்ம்புகிறது. இந்திய இசையும் நடனமும் பழகி போட்டிக்குத் தயாராகும் போது இந்தியப் பண்பாடு பற்றி இளைஞ்ர்கள் அறிந்து கொள்ள நல்லதோர் வாய்ப்பு ஏற்படுகிறது. நடனமாடிய இளையோரில் சிலர் வருங்கால 'ஹிருதிக் ரோஷன்'களாகவோ, 'ஐஸ்வர்யா ராய்'களாகவோ திகழலாம் திரையுலகினர் கவனிக்க!

ICSC யின் மற்றுமோர் முக்கிய சேவை, கோடை விடுமுறையில் இவர்கள் நடத்தி வரும் 'காந்தி இளைஞர்கள் முகாம்' இந்த முகாமில் பங்கேற்பதன் மூலம் காந்தியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், இந்திய பண்பாடு பற்றி அனுபவம் மூலம் புரிந்து கொள்வதற்கும் இளையவர்களுக்கு ஒரு ந்ல்ல வாய்ப்பு அமைகிறது என்பதில் சந்தேகமில்லை. இவ்வருடம் காந்தி முகாம் ஆகஸ்டு 17 முதல் 24ம் தேதி வரை Vedanta Society Retreat, Olema, CA வில் நடைபெறவிருக்கிறது. விபரங்களுக்கு icsc@yahoo.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.

ICSC தனது சமூகக் கலைப் பணிகளில் தொடர்ந்து வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்.

அருணா

© TamilOnline.com