எல்லாம் மகனுக்காக தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர்
T. ராஜேந்தர் தனது முந்தய படங்கள் எதற்கும் விமரிசையான "மூகூர்த்தம்" நடத்தவில்லை. தனது மகன் சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமாகும் "காதல் அழிவதில்லை" மட்டும் இதற்கு விதி விலக்கு. படத் துவக்க விழா மிக விமரிசையாக நடைபெற்றது. அதே போல், வெளி நாடுகளில் சென்று அவர் இது வரைப் பாடல்களைப் படமாக்கியது இல்லை. ஆனால் இம்முறை, நியூசிலாந்தில் இரண்டு பாடல்களைப் படம் பிடிக்க முடிவு செய்துள்ளார். எல்லாம் மகனுக்காக, சரி தானே?

-

© TamilOnline.com