பழம் பெரும் நடிகை மனோரமா தனது நாடகக் காலத்திலிருந்து இன்று சினிமா வரை பல தரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் மிகவும் ஆசைப் பட்டு நடிக்க வேண்டும் என்று ஏங்கும் வேடம் ஒன்று பாக்கி உள்ளது. அது அலியாக நடிப்பது தான்.
வியப்பாக இருக்கிறதா? "அவர்கள் கூட ஒரு விதத்தில் ஊனமுற்றவர்கள் தான். அவர்களது உணர்ச்சிகளை நான் பிரதிபலிக்க யாராவது அந்த வேடம் கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்த ஒரு வேடம் நான் செய்யவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன்" என்றார் மனோரமா. யாராவது இந்த வேடத்தை அவருக்கு அளிக்க தயாராக இருக்கிறீர்களா? |