கடி ஜோக்குகள்
என்ஜினியர்களே? இந்த கடிஜோக்குகளைப் படித்துவிட்டு பற்களை 'நற..நற'வென்று கடிக்க வேண்டாம்!

******


கல்யாணச்சாப்பாடு பந்தியில் : அங்கே பாரு? அந்த ஆள் ரசத்தை சாதத்தாலே அணைக்காமல் இலையிலிருந்து ஓட விடறாரு...''

''உஷ்... மெல்லப்பேசு.... அவர்தான் நம்ம மாகாணத்திலேயே உயர்தர சிவில் என்ஜினியர்.... பெரிய பெரிய அணைக்கட்டு எல்லாம் கட்டி இருக்காரு...''

******


தோழி : ''மெக்கானிக்கல் என்ஜினியரை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டயே; வாழ்க்கை எப்படி போறது?''

''உம்... ஏதோ இயந்திரம் மாதிரி போறது !''

******


தோழி: ''எப்படி இந்த அருமையான ஸாப்·ட்வேர் என்ஜினியரை கணவராக தேடிப்பிடிச்சே?''

''இந்த இன்டர்நெட்லே வலை போட்டுத்தான்!''

******


தோழி : மெக்கானிக்கை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டியே, இப்ப ஏன் வருத்தமா இருக்கே?

தோழி : அவர்'தங்கத்திலே உனக்கு நகை பண்ண பணவசதி இல்லை. இரும்புலே என் பா·க்டரியிலே என் கையாலேயே பண்ணியிருக்கேன்; அதையே போட்டுக்க'ன்னு சொல்லிட்டாரு!

******


ரமேஷ்: நான் நேற்று இருநூறு ரூபாய் இழந்தேன். ஆனாலும் என் மனைவிக்கு அதில் சந்தோஷம் தான்.

சுரேஷ்: அப்படியா. என்னால் நம்ப முடியவில்லை. உன் மனைவி நீ சூதாட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிக்கிறாளா என்ன?

ரமேஷ்: ஏன் கூடாது. நான் அந்தப் பணத்தை நகைகளுக்காகத் தானே செலவழித்தேன்.

ஹெர்கூலிஸ் சுந்தரம்

© TamilOnline.com