இன்பமான வாழ்க்கைக்கு வழி
1. ஒருவருமே இவ்வுலகிலிருந்து உயிருடன் செல்லப்போவதில்லை. ஆகவே நியாயமான, அறிவு நிறைந்த கண்ணியத்தை கடைப்பிடிக்க உறுதி கொள்ளுங்கள்.

2. உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். நல்ல உடல்நலமே ஒவ்வொருவருடைய செல்வத் திற்கும் ஆதாரம். இல்லையென்றால் ஆனந்தத் திற்கே இடமில்லை.

3. இன்முகத்துடனும், பிறர்க்கு உதவும் மனப்பான்மையுடனும் இருக்க உறுதி கொள்ளுங் கள். மற்றவர்கள் உங்களுக்கு இவைகளையே திருப்பி அளிப்பார்கள்.

4. எரிச்சலூட்டும் கோபக்காரர்களை தவிர்க் கவும். இவர்கள் அநேகமாக பழி உணர்ச்சி உள்ளவர்கள்.

5. உணர்ச்சி வெறியர்களை தவிர்க்கவும். இவர்கள் ஹாஸ்ய உணர்ச்சியே இல்லாதவர்கள்.

6. குறைந்து பேசவும், மற்றவர்கள் கூறுவதை அதிகமாக கேட்கவும் கற்றுக்கொள்ளுங்கள். பேசுவதால் மட்டும் நாம் ஒன்றம் கற்றுக் கொள்ள முடியாது.

7. மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை தவிர்க்கவும். மேதாவிகளுக்கு இவை தேவை யில்லை. முட்டாள்கள் இதைக் கேட்க மாட்டார் கள்.

8. இளைஞர்களிடம் மிருதுவாகவும், வயது முதிர்ந்தவர்களிடம் அபிமானத்துடனும், வாழ்க் கையில் முன்னேறுபவர்களிடம் அனுதாபத்துடனும், நேயாளிகள் மற்றும் குற்றம் புரிபவர்களிடம் சகிப்புத்தன்மையுடனும் இருக்க உறுதி கொள்ளுங் கள். ஏனெனில், வாழ்க்கையில் நீங்கள் இவை எல்லாமாக இருந்திருப்பீர்கள், அல்லது இருக்க வேண்டிவரும்.

9. பணத்தை வாழ்க்கையின் வெற்றியுடன் ஒப்பிடாதீர்கள். ஏனெனில் பல பணக்காரர்கள் மனித வாழ்க்கையில் படுமட்ட தோல்வியடைந் திருக்கிறார்கள். வெற்றியின் மதிப்பீடே அதை எவ்வாறு அடைந்தார் என்பதுதான்.

லாயிட் ஷீயரர் (Lloyd shearer)
ஆதாரம்: San Jose Mercury News
தொகுத்தனுப்பியவர்: திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com