காசிக்கு போனவர்கள் கங்கையில் குளிக்காமல் வருவதுண்டோ? அது போல் அமெரிக்கா சென்றவர்கள் நயாக்ரா நீர்விழுச்சியை காண ஆர்வமாய் இருப்பார்கள். மர்லின் மன்றோ நடித்த 'நயாக்ரா' திரைப்படத்தைப் பார்த்து இந்த இரண்டு அழகிகளில் உயர்ந்தவர் யார்? என்று நேரில் முடிவு செய்ய கிளம்பினோம். இந்தியாவில் இருந்து வந்திருந்த பெற்றோருக்கு கனடா சுற்றுலா விசா அஞ்சல் மூலம் மிக எளிதாய் பெற்றுக் கொண்டு detroit நகரில் உள்ள எங்கள் நண்பர்கள் வீட்டிற்கு விமானத்தில் சென்றோம்.
நயாக்ராவிற்கு biffalo, boston போன்ற இடங்களிலிருந்தும் காரில் செல்லலாம். Detroit இல் இருந்து கனடா எல்லை சுமார் அரை மணி நேரம்தான். 60, 70 மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்த நாங்கள் 100, 110 கிலோ மீட்டர் வேகத்தில் ஆரம்பித்தோம். 5 மணி நேரத்தில் நயாக்ரா வந்தடைந்தோம்.
மறுநாள் காலை நீர்விழுச்சியைப் பார்க்கச் சென்றோம். நயாகரா நீர்விழுச்சியில் மொத்தம் 3 அருவிகள் உள்ளன. கனடா-அமெரிக்கா எல்லைகோடு நதியின் நடுவில் உள்ளது. கனடா-அமெரிக்கா எல்லைகோடு நதியின் நடுவில் உள்ளது. lake toronto இருந்து நதி 2 பகுதிகளாக பிரிந்து, பெரிய பகுதி கனடாவில் 'குதிரை குளம்பு அருவி' '(Horseshoe fallo) ''மணப்பெண் முகத்திரை அருவி'' ஆகவும் விழுகிறது.
சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன் இந்த அருவி தற்பொழுது இருக்கும் இடத்திலிருந்து 7 மைல் தள்ளி இருந்ததாம். நீரில் வேகத்தில் ஒரு வருடத்திற்கு சுமார் 3 அடி பாறை தேய்ந்து அருவி பின்னோக்கி சென்றுவிட்டது. இப்போது தரமின் திட்டத்திற்கு தண்ணீர் இரவில் அதிக அளவு திருப்பிவிடப்படுவதா தேய்மானம் அளவு குறைந்துவிட்டது. நயாக்ரா நீர்மின் திட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் 4500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கனடாவில் உள்ள நீர்விழுச்சி சுமார்170 அடி உயரம், 2200 அடி அகலம். ஒருநொடிக்கு வெயில்காலத்தில் சுமார்34 மில்லியன் காலன் நீரும் குளிர் காலத்தில் 19 மில்லியன் காலன் நீரும் அருவியில் விழுகிறது. இதில் 90% கனடா அருவியிலும் 10% அமெரிக்க அருவியிலும் விழுகிறது.
வருடம் முழுவதும் இரவு நேரத்தில் வண்ண விளக்குகள் ஏற்றி அருவியின் அழகிற்கு அழகு சேர்க்கப்படுகிறது. சுமார் 21 எக்ஸ்னேரா விளக்குகள் 250 மில்லியன் மெழுகுவர்த்தி ஒளி வெளிச்சம் கொடுக்கிறது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெள்ளியும், ஞாயிறும் இரவு 10 மணிக்கு வாணவேடிக்கைகள் நடைபெறுகின்றன. (இதற்கும், விளக்குகளுக்கும் ஆகும் செலவை கனடாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொள்கிறது) வானத்தில் நெருப்புப் பூ மலர்ந்து கீழே வர, வண்ண விளக்கொளி ஆடையுடன் அருவியிலிருந்து நீர்ப்பூக்கள் மேலே எழும்ப, ''ஓவியனும் வரைந்ததில்லயே, இதைப் போல் பேரழகைக் கண்டதில்லையே'' என்று ஆனந்தம் மனதில் பூவாய் மலர்கிறது.
அருவிக்கு அருகில் ''Table Rock House" எனும்இடத்தில் 'அருவிக்கு பின்புற பயணம்' (Journey behind the falls) செல்ல நுழைவாயில் உள்ளது. அருவியை 150 அடி தூரத்திலிருந்து காண குகைகள் குடைந்து வைத்துள்ளனர். அருவியின் ஆரவார ஒலியை அருகிலிருந்து கேட்டு, நீர் துளிகள் பெருமழையாய் நம்மேல் சாரல் தெளிப்பது நயாக்ராவின் வேகத்தை நமக்கு உணர்த்துகிறது. (ஆகும் நேரம் - கூட்டத்திற்கேற்ப 45 நிமிடம் - 2 மணி)
அருவிக்கு அருகில் sklon tower என்று அழைக்கப்படும் 520 அடி உயர கட்டிடம் உள்ளது. அதன் மேலிருந்து நயாக்ரா அருவியையும் அதை சுற்றி சுமார் 80 மைல் தொலைவு வரை உள்ள பகுதிகளையும் காண முடிகிறது. நாம் பார்க்கும் காட்சி என்ன என்பதையும், பல ருசிகரமான வரலாற்று செய்திகளையும் ஆங்காங்கு எழுதி இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. ஆகும் நேரம் 45 நிமிடம் - 1.30 மணி)
அருவியிலிருந்து சுமார் 3 மைல் வடக்கே ''ஸ்பானிஷ் ஏரோகார்' உள்ளது. 1916ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் winch நயாக்ரர ஆற்றில் சூழல்களின் மேல் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. பத்து நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் இந்த திக்-திக் பயணத்தில் நாம் நின்றபடி நயாக்ரா நதி வடகிழக்கே திரும்பும் இடத்தில் தோன்றும் அருமையான சூழல்களைக் காணலாம்.
நயாக்ரா அருவியை மிக அருகிலிருந்து ''சாரலின் சகோதரி'' (maid of the misc) என்ற படகு பயணத்திலிருந்து காணலாம். 1846ஆம் ஆண்டிலிருந்து பல கோடி மக்களை நயாக்ராவை தொட்டுவிடும் தூரத்திலிருந்து காண 30 நிமிடப் பயணம் அழைத்துச் செல்கிறது இந்த படகு. வேறு எந்த இடத்திலிருந்தும் தெரியாத காட்சிகளை இந்த படகில் காண முடிவதால் இது மறக்க முடியாத ஒரு இனிய அனுபவமாக இருந்தது.
அருவிக்கு சுமார் 1 மைல் தெற்கே ட·பரின் தீவுகள் (Dufferin islands) என்ற இடம் உள்ளது. பல ஓடைகள், ஏரிகள், நீர்பறவைகள் நிரம்பிய இந்த இடம் ரம்மியமாக இருப்பதுடன், பல ஆண்டுகளுக்கு முன் ஏரியில் சிக்கிய ஒரு படகை அருவியிலிருந்து காண சந்தர்ப்பம் அளிக்கிறது.
இவற்றைத் தவிர பூவினால் செய்த கடிகாரம் சுழலின் அருகில் நடந்து செல்ல வசதி படைத்த great geroge adventure, botanical gardan, imax theater,குழந்தைகள் விளையாட்டு அரங்குகள், சிப்பியில் நம்பினால் நம்புங்கள் பெட்டகம், சூதாடும் இடங்கள் போன்றவையும் அருவிக்கு அருகில் உள்ளன.
பலநாட்டு உணவு விடுதிகள் இருப்பதால் உணவு பிரச்சனை இருப்பதில்லை. அமெரிக்காவில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் இருக்கும். ஆனால் நயாக்கராவில் அப்படி இருப்பதில்லை. கடைகளில் தண்ணீர் புட்டிகள் வாங்க வேண்டி உள்ளது. அமெரிக்க பணம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் எல்லையில் கனடா பணமாக மாற்றிக் கொண்டால் நல்ல exchage rate கிடைக்கும். வெயில் காலத்தில், குறிப்பாக வாரஇறுதியில் கூட்டம் அதிகமாக வருவதால் தங்கும் இடங்களுக்கு ஏக போட்டி. அதனால் முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.
நயாக்ரா அமெரிக்க புதுமண தம்பதிகள் தேன்நிலவுக்கு செல்ல தேர்ந்தெடுக்கும் பிரபலமான இடம். நெப்போலியன் போனாபொர்டின் தம்பி தன் மனைவிய இங்கு தேன்நிலவுக்கு அழைத்து வந்து இந்த வழக்கத்தை தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாக்ராவில் 4 பாலங்கள் உள்ளன. 'எல்லை' என்ற வார்த்தையைக் கேட்டாளே 'சண்டை' என்ற வார்த்தை நினைவுவரும் இந்த காலத்தில் எல்லை இல்லாத நயாக்ராவின் அழகையும், நீர்வளத்தையும் கனடாவும் அமெரிக்காவும் ஒற்றுமையாய் ஆராதிப்பது ஆனந்தம் அளிக்கிறது.
நயாக்ரா பற்றிய மேலும் பல விவரங்களை
http://www.infoniagara.com மற்றும் போன்ற websiteகளில் காணலாம்.
மீரா சிவகுமார் |