ஜூலை 2002 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக

5. முற்காலத்தை அறியாமலே எழுதப்படும் வரலாற்று நூல் (6)
6. ஊர் மனதில் நிலைக்கச் செய் (2)
7. பிடித்தவருக்குத் திமிர், படித்தவருக்குச் சொல்ஞானம் (4)
9. வழக்குத் தொடுத்தவர் குன்னூர் பாதி செல்ல பயன்படுத்தும் வாகனம் (4)
10. இனிக்கும் செய்யுள் நேரில் பார் (4)
12. பக்காத்திருடன் அணைப்பில் கொஞ்சகாலம் பொறு (4)
13. பெரிய பெரிய உறவினர் (2)
14. பழந்தமிழில் பிறருக்குப் புரியாத மொழி (6)

நெடுக்காக

1. சதுரங்கத்தின் கட்டத்திற்கொன்றாக இத்தகைய கலைகள் (2)
2. சோமன் தலையைச் சுற்றும் சூரியன் ஆராய்ந்து பார் (4)
3. நாகரிகமானவர் ஜலதோஷத்தால் அவதியுறும்போது இப்படி அனுமதி கேட்பாரா? (4)
4. அபூர்வமாய்ப் பூக்கும் மரத்தில் பகீர் என்று பாயும் கெட்டபெயர் (6)
8. அக்கறையுடன் யானை கிராமத்துச் சுற்றத்தாராக (6)
11. கலைச்செல்வம் சேர்க்க செ...செ...சென்றிடுவீர் எ ...எ. ..எட்டு ----- (பாரதியார்)(4)
12. துறவி பூணுவது ஒரு நதியில் சுரமில்லாமல் பிள (2, 2)
15. தம்மையே கெடுக்க வல்ல மக்கள்? (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக: 5. சுயசரிதை 6. பதி 7. அகராதி9. வானூர்தி 10. பாசந்தி 12. காத்திரு 13. மாமா 14. குழூஉக்குறி
நெடுக்காக: 1. ஆய 2. பரிசோதி 3. தும்மவா 4. அபகீர்த்தி 8. கரிசனமாக 11. திக்கும் 12. காவி உடை 15. குடி

© TamilOnline.com