ஆமவடை
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 ஆழாக்கு
கடலைபருப்பு - 1/2 கரண்டி
உ. பருப்பு - 1/2 கரண்டி
பயத்தம் பருப்பு - 1 கரண்டி
மிளகாய் வற்றல் - 6
உப்பு - தேவையானது
பெருங்காயம் . சிறிதளவு
கருவேப்பிலை . சிறிதளவு
எண்ணெய் - 1 ஆழாக்கு

செய்முறை

துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு இவற்றை தனியாகவும் கடலை பருப்பை தனியாகவும் பாத்திரங்களில் போட்டு நீர்விட்டு களைந்து பிறகு சுமார் 1 மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் இவற்றுடன் கடலைபருப்பையும் போட்டு கூடிய வரையில் தண்ணீர் அதிகம் விடாமல் 5, 6 செகண்டுகள் மிக்ஸியில் அரைக்கவும்.பிறகு உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பையும் போட்டு கரகரப்பாகவும் கெட்யாகவும் அரைத்து எடுக்கவும். கருவேப்பிலையை கிள்ளி போடவும். வடை தட்டும் நேரத்தில் பயத்தம் பருப்பை போட்டு கலந்து, இடது உள்ளங்கையில் தண்ணீரை தடவி வலது கையால் சிறு உருண்டையாக உருட்டி இடதுகையில் வைத்து லேசாக அழுத்தவும். பிறகு ஸ்பூன் அடிபாகத் தால் லேசாக பிளந்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு இளஞ்சிவப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்

பருப்பு வகைககள் ஊறிய பிறகு களைந்தால் பருப்பு வாசனை போய்விடும்.

பயத்தம் பருப்பை ஊற வைக்காமல் போடுவ தால் வடை நல்ல கரகரப்பாக இருக்கும்.

வடை மிகவும் மிருதுவாக இருக்க வேண்டு மென்றால் கடலை பருப்பை அதிகமாக போட வேண்டும்.

கடலைபருப்பு அரைப்பட சற்றுநேரமாகும். எனவே அதை தனியாக நனைத்து முதலில் அரைக்க வேண்டும்.

© TamilOnline.com