தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் - 10 புளி - நெல்லிக்காய் அளவு உளுத்தம்பருப்பு - 1/4 கரண்டி கடலை பருப்பு - 2 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு வெல்லத்தூள் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 கரண்டி
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு பெருங் காயத்தை பொரித்து உ.பருப்பு, க.பருப்பு இவற்றை பொன்னிறத்தில் வறுத்து எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை வதக்கவும். பருப்பு வகைகளை மிக்ஸியில் பொடி செய்யவும். உப்பு, புளி, வதக்கிய பச்சை மிளகாய் இவற்றையும் அரைக்கவும். வெல்லத்தை கொதிக்கவிட்டு கெட்டியாக கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடிசெய்த பருப்பு வகைகள், அரைத்த மிளகாய் விழுது பெருங்காயப்பொடி இவற்றுடன் கெட்டியான வெல்லப்பாகைவிட்டு சிறிது கிளறி கீழே இறக்கவும். அதிக காரம் இல்லாமல் சுவையான மிளகாய் தொக்கு.
குறிப்பு: வெல்லத்தை தூளாக போடுவதை விட பாகாக கிளறிவிடுவதால் ஊறுகாயின் ருசி அதிகமாகும்.
இந்திரா காசிநாதன் |