தேவையான பொருட்கள்
பூண்டு உரித்த பல் - 1 ஆழாக்கு மிளகாய் வற்றல் - 10 முதல் 15 வரை எலுமிச்சம் பழச்சாறு - 1/2 ஆழாக்கு எண்ணெய் - 1/2 ஆழாக்கு வெல்லப்பொடி - 1 ஸ்பூன் வெந்தயம் - 2 ஸ்பூன் உப்பு - தேவையானது
செய்முறை
வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுக்கவும். 4 ஸ்பூன் எண்ணெய்விட்டு மிளகாய்வற்றலை வறுக்கவும்.
வறுத்தவற்றை மிக்ஸியில் பொடி செய்யவும். மீதி உள்ள எண்ணெயை வாணலி யில் விட்டு காய்ந்ததும் உரித்த பூண்டைபோட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சிறிய கரண்டியில் 2 ஸ்பூன் நீர் விட்டு வெல்லப் பொடியை போட்டு சிறிது கொதித்து கெட்டி யானதும், எலுமிச்சம் பழச்சாறில் பூண்டு வெந்ததும் அதில் விடவும். வெந்தய பொடி, மிளகாய்பொடி இவற்றைபோட்டு நன்றாக கிளறி கீழே இறக்கவும்.
குறிப்பு: பூண்டு நன்றாக மூழ்கும் அளவு எலுமிச்சம் பழச்சாறு இருக்கவேண்டும். இதே முறையில் பாகற்காய், உருளைகிழங்கு ஆகிய வற்றையும் ஊறுகாய்களாக செய்யலாம்.
இந்திரா காசிநாதன் |