எலுமிச்சம் பழ (உடனடி ஊறுகாய்) (இரண்டாவது வகை)
தேவையான பொருட்கள்

முதல் வகையில் உள்ள அதே பொருட்கள்

செய்முறை

எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து சிறிதளவு உப்பு போட்டு வைக்கவும். பாதியளவு சாறை எடுத்து வேறு எதற்காவது உபயோகிக்கலாம்.

பழத்தின் தோலினை பொடிப்பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு பருப்பு வேகவிடுவது போல் குக்கரில் (உப்பு போடாமல்) வேக விடவும்.

வெந்த எலுமிச்சம் பழ தோலினில் உப்பு போட்டு சிலமணி நேரம் ஊற விடவும். பழத்தோலில் உள்ள தண்ணீரை வடிகட்ட வேண்டாம். முதல்வகை ஊறுகாய்க்கு செய்ததை போல் வெந்தயபொடி, மிளகாய் பொடி இவைகளை வறுத்து பொடி செய்யவும். பிழிந்து வைத்துள்ள பழசாற்றை வெந்த பழத்தோலில் வறுத்து பொடி செய்யவும். பிழிந்து வைத்துள்ள பழ சாற்றை வெந்த பழத்தோலில் விடவும். மிளகாய்பொடி, வெந்தயபொடி, பெருங்காய பொடி, மஞ்சள்பொடி போட்டு எண்ணெயில் கடுகு தாளித்துவிடவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com